அதிமுகவில் சாமானிய தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம்... அதற்கு நானே சாட்சி... ஆர்.பி. உதயகுமார் கருத்து!!
அதிமுகவில் சாமனிய தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் என்றும் அதற்கு தானும் ஒரு சாட்சி என்றும் எதிர்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சாமனிய தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் என்றும் அதற்கு தானும் ஒரு சாட்சி என்றும் எதிர்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆர்.பி.உதயகுமார் வாழ்த்து பெற்றார். பின்ன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானிய தொண்டன் எனக்கு இந்து வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்து மாஸ் காட்டிய எடப்பாடி.. அல்லு தெறிக்கும் திமுக.
அவரது நம்பிக்கைககு உரியவனாகவும் தலைமைக்கும், கழகத்துக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எவ்வாறு விசுவாசமாக பணியாற்றினோமோ அதேபோன்று பணியாற்றுவோம். சாமானிய தொண்ணடனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதை நிரூபித்து காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக சாட்சியாக இன்று நானும் இருக்கிறேன். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை நோக்கத்தோடு எனக்கு தெய்வ உள்ளதிடு இந்த வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாது..! இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ் அணி
திமுகவின் நிர்வாக குளறுபடிகளை தோல் உரித்து காட்டுகிற பணியினை கடந்த ஓராண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். இனிவரும் காலங்களிலும் அவர் காட்டுகிற வழியில் பயணிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியை வார்த்தையால் சொல்லாமல் வாழ்வில் வாழ்ந்து காட்டுவேன். அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள். இன்று அதில் நானும் ஒருவனாக ஒரு சாட்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.