காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தனது குடும்ப கட்சியான பாஜகவில் இணைந்தார். 

குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. அவரின் பாட்டி விஜயராஜே சிந்தியா பாஜக கட்சியின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது மகள்கள் வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே ஆகிவரும் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால் அவரது மகனான மாதவராவ் சிந்தியா ஜனசங்கத்தில் தனது அரசியல் பயணத்தை 1971-ம் ஆண்டு தொடங்கி 1980-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.

இதையும் படிங்க;-  நாட்டை உலுக்கிய ஆணவக் கொலை... தெலங்கானாவில் கூலிப் படையை ஏவிய அம்ருதாவின் தந்தை தற்கொலை!

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக மாதவராவ் சிந்தியா இருந்தார். 9 முறை எம்.பி.யாக இருந்த மாதவராவ் சிந்தியா, 1971-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை நடைபெற்ற எந்தவொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியையே சந்திக்காத சிறப்புக்குரியவர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடன் 1996-ம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியை தொடங்கிய மாதவராவ் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதையும் படிங்க;- சிஏஏ எதிர்ப்பு வன்முறை... டெல்லியில் பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்ட தம்பதியினர் அதிரடி கைது..!

மாதவராவ் சிந்தியா 2001-ம் ஆண்டு விமான விபத்தில் திடீர் மரணமடைந்தார். அதன் பின்னர் தந்தை எம்.பி.யாக இருந்த மக்களவைத் தொகுதியான குணாவில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலாக எம்.பி.யானவர். ஜோதிராதித்ய சிந்தியா. அப்போது முதல் 2019-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். மத்திய அமைச்சர் பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோர் மத்தியப் பிரதேச அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு, கமல்நாத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இதையும் படிங்க;- மாதவிடாய் என்றும் பாராமல் மிருகத்தை விட கொடூரமாக இளம்பெண் கூட்டு பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி அடைந்தார். முதலில் ஜனசங்கத்திலிருந்து விலகிய தந்தை மாதவராவ், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு, அதிருப்தியில் காங்கிரஸைவிட்டு சிறிது காலம் விலகியிருந்தார். தற்போது மகன் ஜோதிராதித்ய சிந்தியாவும் தந்தை வழியில் காங்கிரஸைவிட்டு விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்து தனது பாட்டி விஜய ராஜே சிந்தியாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது.