குடியுரிமை திருத்த சட்டத்தினை பயன்படுத்தி இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த காஷ்மீர் தம்பதியினரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

குடியுரிமை திருத்த சட்டம் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தால் கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாளர்களும், எதிர்பார்களும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லி ஜாமியா பகுதியில் காஷ்மீரை சேர்ந்த தம்பதியினரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தற்போதைய போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய இளைஞர்களை தூண்டுவதற்கான வேலையை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

அவர்கள் இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்து உள்ளனர் என விசாரணையில் இடம்பெற்று உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த ஜஹான்சாயிப் சமி மற்றும் அவருடய மனைவி ஹினா உளவுத்துறையின் சளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.