Asianet News TamilAsianet News Tamil

மணலில் 60 ஆயிரம் கோடி சம்பாதிச்சிருக்காரு.! வீடியோ வெளியிட்டு துரைமுருகனை போட்டு தாக்கும் மாஜி திமுக நிர்வாகி

மணலில் 60 ஆயிரம் கோடி அளவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்தும் சம்பாதித்து இருப்பதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட குடியாத்தம் குமரன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Former DMK executive has complained that Duraimurugan has earned 60 thousand crores in Sand KAK
Author
First Published Nov 23, 2023, 8:11 AM IST | Last Updated Nov 23, 2023, 8:11 AM IST

திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவிற்கு எதிரான பல்வேறு கருத்துகளை கூறும் எதிர்கட்சிகளை விமர்சித்து திமுகவின் கொள்கை பரபரப்பு துணை செயலாளர் குடியாத்தம் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். இதனிடையே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குடியாதம் குமரன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்,  பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 

Former DMK executive has complained that Duraimurugan has earned 60 thousand crores in Sand KAK

துரைமுருகன் மீது புகார்

குடியாத்தம் குமரை கட்சியில் இருந்து நீக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதில், கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும். தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் ஒரு வீடியோவை குடியாத்தம் குமரன் வெளியிட்டுள்ளார் அதில், . எனக்கும் துரைமுருகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை அவருடைய மகன் கதிர் ஆனந்த்தான் வேலூர் மாவட்டத்திலேயே பிரச்னை. துரைமுருகனின் தம்பி ஒரு பக்கம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு பக்கம் என்று குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. 

 

60ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார்

30 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டதாக எவனோ ஒருவன் பொய்யான ஆடியோவை வெளியிட்டான். ஆனால், உண்மையில், மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை நான் விரைவில் வெளியிடுவேன்.

துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் எனிடம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் என்னை செருப்பால் அடித்தாலும் எனது கட்சி தி.மு.க தான். என்னுடைய தலைவர் ஸ்டாலின் தான். என்னுடைய வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான் என குடியாத்தம் குமரன் ஆவேசமாகப் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

DMK: திமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் அதிரடி நீக்கம்..! என்ன காரணம் தெரியுமா?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios