’நிதி மேலாண்மை படிச்ச உங்களுக்கு, மக்களின் நாடி துடிப்பு தெரியல’ - பிடிஆரை கலாய்த்த ஆர்.பி உதயகுமார் !
திமுக ஆட்சியில் 2021-22ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. 2022 -23ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், இப்போதைய திருமங்கலம் எம்.எல்.ஏவுமான உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ‘ 2011ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1. 14 லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. அதில் அனைத்தும் மூலதன செலவு செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் 2021-22ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. 2022 -23ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !
இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள். வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா. அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரியவில்லை என்கிறார். தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும், அந்த துறைகளுக்கு தானே சேரும்.
இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
அதுவும் தமிழ்நாடு அரசு தானே. அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே. நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தியாகராஜன் சொல்லும் நிதி நிலைமை கம்பெனி கணக்கிற்கு வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர ஏழை எளிய மக்களுக்கு எந்த பலனும் அளிக்காது. நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள அமைச்சர் தியாகராஜனுக்கு மக்களின் நாடி துடிப்பு தெரியவில்லை’ என்று கூறினார்.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?