Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சியை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி..

அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்பே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Former AIADMK minister has praised the DMK regime says Chief Minister M.K.Stalin speech-rag
Author
First Published Oct 20, 2023, 9:52 PM IST | Last Updated Oct 20, 2023, 9:52 PM IST

இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, ரூ.5.95 கோடி மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

Former AIADMK minister has praised the DMK regime says Chief Minister M.K.Stalin speech-rag

மேலும் கொளத்தூர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Former AIADMK minister has praised the DMK regime says Chief Minister M.K.Stalin speech-rag

அப்போது பேசிய அவர், “மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்வு பெறுகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது” என்று கூறினார்.

Former AIADMK minister has praised the DMK regime says Chief Minister M.K.Stalin speech-rag

தொடர்ந்து பேசிய அவர், “அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்பே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளார்” என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios