அமித்ஷா பிறந்தநாள்... முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்.!சைலண்ட் மோடில் இபிஎஸ் கூட்டணியினர்- ஷாக்கில் பாஜக

மத்திய உள்துறை அமித்ஷா பிறந்தநாளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கவில்லை. 

EPS did not wish Amit Shah on his birthday as the alliance with BJP broke KAK

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணி 4 ஆண்டுகள் தொடர்ந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனையடுத்து புதிய அணியை அமைக்க இரு தரப்பும் முயன்று வரும் நிலையில், யார் எந்த பக்கம் செல்வார்கள் என்ற பதில் கிடைக்காமல் அரசியல் வட்டாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது 59 வது பிறந்தநாளை நேற்று  கொண்டாடினார்.  அவருக்கு பல்வேறு மாநில ஆளுநர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

EPS did not wish Amit Shah on his birthday as the alliance with BJP broke KAK

அமித்ஷா பிறந்தநாள் - முந்திக்கொண்ட ஓபிஎஸ்

தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அனைவரையும் முந்திக்கொண்டு நேற்று முன் தினம் மாலையே அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார். நேற்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், மற்றும் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவுனர் ராமதாசு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாசு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 

EPS did not wish Amit Shah on his birthday as the alliance with BJP broke KAK

அதிமுக கூட்டணியில் யார்.?

அதிமுக பா.ஜ.க கூட்டணியில் இருந்த வரை அமித்ஷா பிறந்தநாள் அன்று எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்ல தவறியதில்லை. கூட்டணி முறிவுக்கு பின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? அதிமுக பக்கம் செல்வார்களா? பா.ஜ.க பக்கம் செல்வார்களா? என்ற கேள்விகள் எழுந்து வரும் சூழலில், அன்புமணி ராமதாசு, கிருஷ்ணசாமி, ஜி.கேவாசன்,  போன்றோர் வாழ்த்து தெரிவிக்காதது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது

இதையும் படியுங்கள்

தொடரும் கைதுகள்... ஆய்வு செய்ய குழு அமைத்த பாஜக தேசிய தலைமை - திமுகவிற்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios