தொடரும் கைதுகள்... ஆய்வு செய்ய குழு அமைத்த பாஜக தேசிய தலைமை - திமுகவிற்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை

தமிழக பாஜக நிர்வாகிகள் கைது சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைமை அமைத்துள்ள நிலையில், கடந்த 30 மாதங்களாக நடைபெறும் திமுக அரசின் அத்து மீறல்கள் வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

The BJP national leadership has constituted a 4 member committee to investigate the arrest of BJP officials in Tamil Nadu KAK

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் பாஜக- திமுக இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பியதாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கெடுக்கும் வகையில் நடப்பதாகவும் கூறி அவ்வப்போது பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலது கரமாக இருந்த அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில்  பாஜகதேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்த குழு தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீது நடைபெறும் கைது சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. இந்த குழுவில்

The BJP national leadership has constituted a 4 member committee to investigate the arrest of BJP officials in Tamil Nadu KAK

4 பேர் கொண்ட குழு அமைப்பு

1. ஸ்ரீ டி.வி. சதானந்த கவுடா, முன்னாள் முதலமைச்சர், 2. சத்ய பால் சிங், எம்பி, முன்னாள் போலீஸ் கமிஷனர், மும்பை, 3. ஸ்ரீமதி. டி.புரந்தேஸ்வரி, மாநிலத் தலைவர், ஆந்திரப் பிரதேசம், பா.ஜ.க, 4. ஸ்ரீ பி.சி. மோகன், எம்.பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் திமுக அரசின் கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற நடத்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்ததற்கு தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு தமிழக பாஜக சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக  ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாசிசப் போக்கை மட்டுமே காட்டி வருகிறது.

The BJP national leadership has constituted a 4 member committee to investigate the arrest of BJP officials in Tamil Nadu KAK

பாஜக நிர்வாகிகள் துன்புறுத்தல்

தமிழக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இதில் பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் திமுக நிர்வாகிகளால்  தாக்கல் செய்யப்படுகின்றன.  மேலும்  ஊழல் திமுக அமைச்சர்களை திருப்திப்படுத்தும் வகையில் கைது செய்ய கோரி  காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கைது செய்வது,

 

ஜாமீன் வரும்போது அற்ப குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சுமத்துவது, வார இறுதி நாட்களையொட்டி கைது செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். எனவே கடந்த 30 மாதங்களில் திமுக அரசின் அத்துமீறல்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios