Asianet News TamilAsianet News Tamil

பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது..

பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பிய பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

BJP supporter john ravi arrested in Thoothukudi for spreading slanderous comments about Periyar-rag
Author
First Published Oct 22, 2023, 10:43 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவீந்திரநாத். பாஜக ஆதரவாளரான இவர் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

BJP supporter john ravi arrested in Thoothukudi for spreading slanderous comments about Periyar-rag

தனது ட்விட்டரில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்தும், திமுக, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசை, பாஜகவை விமர்சிப்பவர்களை எதிர்த்தும் கருத்திட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ட்விட்டரில் கவர் படமாக வைத்து உள்ளார்.

இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிற்பதை போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பெரியார் குறித்து அவதூறு கருத்து பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios