அரசியலில் எதுவும் நடக்கலாம்; வரும் தேர்தலில் அதிமுக எங்கள் அணியுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Alliance with ADMK may be possible - TTV Dinakaran:தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்படைந்து வருகிறது. அரசியல் தலைவர்களும் தங்களது கூட்டணி வியூகங்கள் குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி, இந்தி விவகாரம் உள்ளிட்டவை குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒருவேளை அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் மும்மொழி கொள்கையையும் ஹிந்தி மொழியையும் ஏற்றுக் கொண்டிருப்பார். அண்ணா தனது பேட்டி ஒன்றில், 'இந்தியாவிற்கு மூன்றாவது மொழி எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அது வரும். அந்த மூன்றாவது மொழியாக ஹிந்தி தான் இருக்கும்' என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

அண்ணா குறிப்பிட்டு கூறுகையில் மும்மொழி கொள்கையை ஏற்பதற்கு நாங்கள் தயார் தான், சென்னையில் குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகள் போதிக்கப்பட்டது. அதேபோல் ஹிந்தியையும் பள்ளிகளில் கற்பிக்கலாம். பெரியார் தாய் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சுதந்திரம் பெற்ற நாளை, ஒரு கருப்பு தினம் என்று பெரியார் கூறினார். அவருடைய சீடராகிய அண்ணா அதற்கு கண்டனம் தெரிவித்தார்.

கைகோர்க்கும் சசி, டிடிவி, திவாகரன்… கலக்கத்தில் எடப்பாடி! திகுதிகுக்கும் பாலிடிக்ஸ்!!

மோடியும், ஜெயலலிதாவும் சிறந்த நண்பர்கள். மோடியா? லேடியா? என தேர்தல்பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா பேசினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் 'மோடியா, லேடியா' என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். இது தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பேசியது. எதிர்நோக்கத்துடன் பேசியது கிடையாது. அம்மாவும், மோடியும் சிறந்த நல்ல நண்பர்கள்.

மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது உண்மை. அதில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. திமுக ஆட்சியில் கழிவறையில் கூட ஊழல் நடந்திருக்கிறது. டெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள், ஊழலுக்கு எதிராக அரவிந் கெஜர்வால் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர். இன்று அவரே ஊழலில் சிக்கி உள்ளார். இன்று டெல்லி மக்கள் அவரை தோற்கடித்ததை நாடே அறியும். இதுபோல திமுக ஊழல்களும், வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

திமுக என்ற தீய சக்தி ஆட்சியை ஆட்சி பொறுப்பிற்கு வரக்கூடாது என்ற மனப்பாண்மையுடன், கூட்டணிக்கு வரக்கூடியவர்களோடு தேர்தலில் கைகோர்ப்போம். எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவோ, எடப்பாடி இல்லாத அதிமுகவோ எங்கள் அணியில் இணைய வேண்டும். ஆனால், ஒரே கட்சியாக சேர்ந்து நிற்போம் என்பது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் விருப்பம்.

ரூபாய் என்ற எழுத்து மாற்றப்பட்டதற்கு பல்வேறு கண்டனங்கள் முன் வைக்கப்படுகிறது. திமுகவின் செயல்பாடுகள் சிறுபிள்ளைகள் விளையாட்டாக உள்ளது. சிறுபிள்ளைகள் கையில் விளையாடக்கூடிய விளையாட்டுப் பொருளை உடைப்பது போன்று திமுக அரசு சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறது. இவ்வாறு, டிடிவி தினகரன் கூறினார்.

முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், டி.டி.வி. தினகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

எடப்பாடி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு அடிப்பது போல் முதல்வரானார்.! போட்டுத்தாக்கும் டிடிவி தினகரன்