DVAC Raid: எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் மீண்டும் சோதனை.. அதிர்ச்சியில் அதிமுகவினர்.!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 6 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- கருணாநிதிக்கூட இவ்வளவு பழி வாங்கியதில்லை.. மு.க. ஸ்டாலின் மிக மோசம்.. மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புலம்பல்.!
58 இடங்களில் சோதனை
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 6 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் எஸ்.பி.வேலுமணி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், எஸ்.பி.வேலுமணி, அன்பரசன், ஹேமலதா, சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணவரதன், சரவணகுமார் மற்றும் 3 நிறுவனங்கள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சோதனை நடந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை எஸ்.பி.,வேலுமணி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- பயங்கர அதிர்ச்சி... கையை கழுத்தில் மாட்டிக் கொண்டு SP வேலுமணி.. அதிமுகவினரை கதறவைக்கும் புகைப்படம்.