கருணாநிதிக்கூட இவ்வளவு பழி வாங்கியதில்லை.. மு.க. ஸ்டாலின் மிக மோசம்.. மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புலம்பல்.!

அதிமுகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்கு போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஜெயக்குமாரைப் போல எங்களையும் சிறையில் அடையுங்கள்.  அதற்குமேல் உங்களால் என்ன செய்ய முடியும்?

Even Karunanidhi has never taken such revenge. Stalin is very bad .. Former Minister SB Velumani laments.!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக்கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது திமுக ஊழல் புகார்களை கூறி வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய நாள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதேபோல சென்னையில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 வழக்குகள் பாய்ந்துள்ளன.

 Even Karunanidhi has never taken such revenge. Stalin is very bad .. Former Minister SB Velumani laments.!

இதனால் அதிமுக தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28 அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கோவை அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர். அப்படிச் சென்றவர்களுக்கு திமுகவில் மதிப்பில்லை. கட்சியிலிருந்து சென்ற வேகத்தில் அதிமுகவுக்கு திரும்பிவர தயாராகின்றனர். அதிமுகவில் ஒருவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்த முறை இன்னொருவருக்குக் கிடைக்கும். Even Karunanidhi has never taken such revenge. Stalin is very bad .. Former Minister SB Velumani laments.!

ஆனால், திமுகவுக்கு சென்றால் வாய்ப்புப் பெற கடைசி இடத்தில்தான் இருக்க வேண்டி வரும். திமுகவினர் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற்றனர் என்று பொது மக்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள்.  அதிமுகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்கு போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஜெயக்குமாரைப் போல எங்களையும் சிறையில் அடையுங்கள்.  அதற்குமேல் உங்களால் என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. திமுக அரசு போடும் பொய் வழக்குகளில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக் கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இருந்ததில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார். 

Even Karunanidhi has never taken such revenge. Stalin is very bad .. Former Minister SB Velumani laments.!

யார் யாரெல்லாம் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் எதிர்த்து பேசுகிறார்களோ, அவர்கள் மீது தற்போது பொய் வழக்கு போடுகிறார்கள். எனவே, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிகமானோர் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios