பயங்கர அதிர்ச்சி... கையை கழுத்தில் மாட்டிக் கொண்டு SP வேலுமணி.. அதிமுகவினரை கதறவைக்கும் புகைப்படம்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கொங்கு மண்டல மாஜி அமைச்சர்களை குறிவைத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறவை அனைவரும் அறிவர். அந்தவகையில் எஸ்.பி வேலுமணி, தங்கமணி போன்றோர் மீதான பழைய வழக்குகளும் தூசி தட்டப்பட்டு வருகிறது. மொத்தத்தில் தங்கள் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி காரிலிருந்து விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் கையில் காயத்துடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பல அதிமுக தொண்டர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு அடுத்து அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருப்பவர் எஸ்.பி வேலுமணி, கோவை மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றிய தளபதிகளில் ஒருவர் எஸ். பி வேலுமணி என்றே சொல்லலாம். தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் என பல பதவிகள் இவருக்கு உள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி வேலுமணி ஜெயலலிதா காலம் தொட்டு முக்கிய அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆவார். எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இதையும் படியுங்கள்: ஆளுநர் ஆர்.என் ரவியை எச்சரித்த Dr.ராமதாஸ்.. பழைய பார்முக்கு வந்த பாமக.. ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்து அசத்தல்.
அதிமுகவில் உள்ள அமைச்சர்களிலேயே வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வரும் சாமர்த்தியசாலி வேலுமணி என்றால் மிகையல்ல என்றே சொல்லலாம். மக்கள் செல்வாக்கிலும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவர் எஸ்.பி வேலுமணி. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.பி வேலுமணியை எதிர்கொள்வதற்காக செந்தில் பாலாஜியை கலம் இருக்கினார் முதல்வர் ஸ்டாலின், வேலுமணிக்கு நிகராக ஆற்றல் படைத்தவர் திமுகவில் ஒருவர் உண்டென்றால் செந்தில்பாலாஜிதான் என்பதால் முதல்வர் அந்த முடிவு எடுத்தார் எனலாம்.
இதனால் திமுக அங்கு கணிசமான இடங்களில் வெற்றி கண்டது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளை அதிமுகவே கைப்பற்றியது. தமிழகம் முழுவதும் திமுக வென்றாலும் கொங்குவில் மண்ணைக் கவ்வியது அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.பி வேலுமணி தான். அப்படிப்பட்ட எஸ்.பி வேலுமணியின் கோட்டையான கொங்குவில் ஓட்டை போட்டவர்தான் செந்தில் பாலாஜி. அந்த அளவிற்கு கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக கட்டிக் காத்து வந்தார் எஸ்.பி வேலுமணி என்பதே அதற்கு காரணம். ஆனால் மீண்டும் கொங்குவை அதிமுகவின் கோட்டையாக்குவதற்கான அத்தனை பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அது நிரூபிக்கப்படும் என்றும் கொங்கு மண்டல அதிமுகவினர் கூறிவருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்- மாஜி அமைச்சர் பா.வளர்மதி அதிரடி .
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கொங்கு மண்டல மாஜி அமைச்சர்களை குறிவைத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறவை அனைவரும் அறிவர். அந்தவகையில் எஸ்.பி வேலுமணி, தங்கமணி போன்றோர் மீதான பழைய வழக்குகளும் தூசி தட்டப்பட்டு வருகிறது. மொத்தத்தில் தங்கள் மீது .
திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர் அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் எஸ். பி வேலுமணியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எஸ். பி வேலுமணி வலது கையில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் தான் அது...
அதாவது நேற்று முன்தினம் இரவு கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் தனது காரில் இருந்து இறங்கும்போதே தவறி விழுந்தாகவும் அப்போது கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் இறங்குவதற்கு முன்னர் வேறு ஒருவர் கார் கதவை திறந்து விட்டதால் எஸ்.பி வேலுமணி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. இதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்து அதிமுக தொண்டர்கள் பலரும் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறோம். விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.