Asianet News TamilAsianet News Tamil

கேட்ட சீட்டு கிடைக்காவிட்டாலும் திமுக உடனான கூட்டணி தொடரும் - துரை வைகோ

திராவிட இயக்கங்களின் கொள்கைகளால் தமிழகம் பாலாகிவிட்டதாக பாஜகவினர் சொல்கின்றனர். அப்படியென்றால் வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் வருவது ஏன் என மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

Durai vaiko slams bjp government in coimbatore vel
Author
First Published Feb 16, 2024, 11:06 PM IST

கோவை காந்திபுரம் மதிமுக அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை  செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு துரைவைகோ பேட்டியளித்தார். அப்போது தேர்தல்  பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ளன. தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு  கொடுத்த சம்மட்டி அடியாக இதைப் பார்க்கிறேன். 12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 6,500 கோடி ரூபாய் பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது. 90 விழுக்காடு நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக வாங்கி இருக்கின்றது. மீதமுள்ள தொகையினை 30க்கும் மேற்பட்ட கட்சிகள் வாங்கி இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

பிறந்து 1 மாதமேயான பச்சிளம் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

மத்தியில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சிகள் மட்டும் ஒரு தரப்பாக தேர்தல் பத்திரம் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கின்றோம். 2024ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது, மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. அதிமுக, பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கின்றோம். 

மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக, மதிமுக கூட்டணி உருவாக்கியது. சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது. யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.

தமிழ் தெரியாது ஒன்லி இந்தி தான்; வடமாநில ஊழியரால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிக்கும் கோவில்பட்டி பயணிகள்

கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என  திமுக தலைமையிடம் கேட்டு இருக்கின்றோம். திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் பாதுகாப்பிற்கு மோடி அரசு தேவை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். 2014 முதல் தறபோது வரை 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கடுமையான அடக்குமுறை செய்து கொண்டு இருக்கின்றனர். மத அரசியலை வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கின்றது. விவசாயிகள் உயிரிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதனால் பொருட்களின் விலை உயர்வு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்; தஞ்சையில் பரபரப்பு

திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் திராவிட இயக்க கொள்கைகளால் தான் படிப்பறிவு, கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் கோலோச்சி கொண்டிருக்கின்றனர். வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக  இங்கே வருகின்றனர். பாஜக சொல்வதை போல திராவிட இயக்க கொள்கைகளால் தமிழ்நாடு பாலாகி போனது என்றால், வட மாநிலத்தில் இருந்து ஏன் இங்கே பிழைப்பு தேடி வருகின்றனர்? 

தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள், கோவில் சொத்துக்களை அபகரிப்பது, மிகப்பெரிய குற்றவாளிகள் என அனைவரும் போய் சேர்வது பாஜகவில் தான். நாட்டை இவர்களிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு காரணம் பாஜக தான் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios