தமிழகத்தின் மினி பட்ஜெட்டை தேர்தலுக்கு செலவு செய்துள்ளது திமுக... செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு!!

தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். 

dmk has spent tamilnadus mini budget for elections says sellur raju

தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பயந்து திமுகவின் 30 அமைச்சர்களையும் முழு நேரமும் பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், 1000,500 பணம், இறைச்சி என அனைத்தையும் வாரி இறைத்து, திமுக இந்த வெற்றியை பெற்று இருக்கிறது. இதனை சாதாரணமாக கிடைத்த வெற்றி என்று கருத முடியாது.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி!

ஜனநாயகம் எவ்வளவு மோசமடைந்து உள்ளது என்பது திமுக ஆட்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பணியாற்றவில்லை என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சுமளவிற்கு ஈரோடு கிழக்கில் மக்களை அடைத்து வைத்து திமுக இதனை செயல்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்து உள்ளது. ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விஸ்வாசத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்கை செல்லுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: நேற்று பிறந்தநாள்.. கனிமொழியுடன் கடைசி போட்டோ.! ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

இதனை திமுகவினர் ஆகா ஓகோ என்று கொண்டாடக்கூடாது. அதிமுக பெரிய வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியை அடைந்தால் கொண்டாடவும், தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். ஓ பன்னீர்செல்வம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று பேசி இருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios