நேற்று பிறந்தநாள்.. கனிமொழியுடன் கடைசி போட்டோ.! ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
பிறகு இதனை அடுத்து படுகாயம் அடைந்த ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ‘நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஸ்டாலின் ஜேக்கப் திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்