Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசை விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்தி பரப்புகிறது... பாஜக மீது மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!!

திமுக அரசையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்திக்களை பாஜகவினர் பரப்பி வருவதாக தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மனோ தங்க ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். 

dmk govt has nothing to criticize so bjp spreading false rumours says mano thangaraj
Author
First Published Nov 27, 2022, 12:23 AM IST

திமுக அரசையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்திக்களை பாஜகவினர் பரப்பி வருவதாக தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மனோ தங்க ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுக அரசு மாத சார்பு தன்மை மற்றும் நான்கு வழி சாலை திட்டங்களை பொறுத்தவரையில் அரசு முரண்பாடாக செயல்படுகிறது என கருத்து கூறியிருப்பதை பொறுத்த வரையில் திமுக மதசார்பு தன்மையில் உறுதியாக செயல்படும். நான்கு வழி சாலை திட்டம் பரந்தூர் விமான நிலைய திட்டங்களை பொறுத்த வரையில் மக்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது.

இதையும் படிங்க: திமுகவில் புதிய மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்... அறிவிப்பு வெளியிட்டார் துரைமுருகன்!

முதல்வர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார். அமைச்சர் ஐ. பெரியசாமியை நிதி அமைச்சர் விமர்சித்ததாக எடுத்து கொள்ள கூடாது. இது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நிதி அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளின் கட்டமைப்புகள் சிதைந்திருந்தது. அது சரி செய்யப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எனது மகன் கலந்து கொண்டது தொடர்பாக பாஜக கூறுவதை பொறுத்த வரையில் அமைச்சர் என்ற முறையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் நடத்தி வருகிறேன்.

இதையும் படிங்க: தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி... திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு!!

சுற்றுலா மாளிகையில் யாராவது ஆய்வு கூட்டத்தை நடத்துவார்களா? அன்று நடந்தது சுற்றுலா மாளிகையில் சில அதிகாரிகளுடான வெறும் கலந்துறையாடல் தான். பாஜகவினருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனுக்கும் என்னையோ திமுக அரசையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் இது போன்ற பொய் வதந்திக்களை பரப்பி வருகிறார்கள். பாஜகவினருக்கு வதந்திக்களை பரப்பி வருவது தான் வேலை என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios