திமுகவில் புதிய மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்... அறிவிப்பு வெளியிட்டார் துரைமுருகன்!

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

duraimurugan announced the appointment of new dmk state admins and audit committee members

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ அணி தலைவராக டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி., செயலாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ அணி துணை தலைவர்களாக எம்.செந்தில்நாதன், எ.வ.வே.கம்பன், கி.வரதராஜன், நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ அணி இணைச் செயலாளர்களாக ரா.லட்சுமணன், அ.சுபேர்கான், ஆர்.கோகுல்கிருபா சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ அணி துணைச் செயலாளர்களாக செ. வெற்றிவேல், எம்.பி.பி.எஸ்., செ.வல்லபன், எம்.பி.பி.எஸ்., ஆர்.இராஜேஸ்வரி மோகன்காந்தி, எம்.பி.பி.எஸ்., ஜெ.அருண், பி.டி.எஸ்., எம்.டிஎஸ்., ஆர்.டி. அரசு, பி.டி.எஸ்., ஆர். அண்ணாமலை, கலை கதிரவன், எம்.பி.பி.எஸ்., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள்:

திமுக பொறியாளர் அணியின் தலைவராக துரை கி.சரவணன், செயலாளராக கு.கருணாநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறியாளர் அணி இணைச் செயலாளராக அ. வெற்றிஅழகன், பொறியாளர் அணி துணைச் செயலாளர்களாக கு. சண்முகசுந்தரம், வே. உமாகாந்த், ரா. நரேந்திரன், சி.பிரதீப், ரா. ப. பரமேசுகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க உடனே இதை செய்யுங்க! அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி

தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள்:

தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர். மகேந்திரன், எம்.பி.பி.எஸ்., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்களாக கவிஞர் மனுஷ்யபுத்திரன், கோவி. லெனின் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக கார்த்திக் மோகன், எஸ்.டி. இசை, தமிழ் பொன்னி, சி.எச். சேகர், சி. இலக்குவன், அழகிரி சதாசிவம், ஏ.கே.தருண் விஸ்வநாதன், ஏ.தமிழ்மாறன், அ. தமிழ்மறை, நவின், எம்.பி.ஏ., எஸ். சுரேஷ், எம்.பி.ஏ., பி.கேசவன், எம்.கே. சிவா, எஸ். பத்மபிரியா, எஸ். பாலா, தரணிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகிகள்:

சுற்றுச்சூழல் அணித் தலைவராக பூங்கோதை ஆலடிஅருணா, சுற்றுச்சூழல் அணிச் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி, நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்களாக செல்வகுமார், சாய் ஜெயகாந்த் பாரதி, சசிதரன், ஆர்.பி. செந்தில்குமார், கார்த்திகேயன் வேலுசாமி, மா. நாராயணமூர்த்தி, மணி சுந்தர், அருண், டாக்டர் சபி, வினோத் காந்தி, கே.ஆர். ரஞ்சன்துரை, கலைச்செல்வன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி... திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு!!

அயலக அணி மாநில நிர்வாகிகள்:

அயலக அணித் தலைவராக கலாநிதி வீராசாமி, எம்.பி., அயலக அணிச் செயலாளராக எம்.எம்.அப்துல்லா, எம்.பி.ஏ., எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர். அயலக அணி இணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், எஸ். செந்தில்குமார், எம்.பி., வழக்கறிஞர் பி. புகழ்காந்தி ப. பரிதி இளம்சுருதி, நியமிக்கப்பட்டுள்ளனர். அயலக அணி துணைச் செயலாளர்களாக விஜயன் இராமகிருஷ்ணன், முத்துவேல் ராமசாமி திருமதி உமாராணி, ப. பரிதி இளம்சுருதி, சேகர் ஜே. மனோகரன் கோ. ஸ்டாலின், நியமிக்கப்பட்டுள்ளனர்.

தணிக்கைக்குழு உறுப்பினர்கள்:

திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக எம்.சுரேஷ்ராஜன், ஏனாதி ப.பாலசுப்பிரமணியன், ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios