Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி... திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு!!

தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருப்பதாக விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

bjp is trying to make it look like the opposition party of tamilnadu says thirumavalavan
Author
First Published Nov 26, 2022, 8:39 PM IST

தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இன்று அரசியலமைப்பு சட்ட நாள். ஒட்டுமொத்த இந்திய மக்களும் நினைவு கூர்ந்து பெருமைப்பட வேண்டிய நாள். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை பாதுகாக்க குடிமக்களாகிய நாம் உறுதி ஏற்க வேண்டிய நாள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அடிப்படையான கோட்பாடுகளை அரசியலமைப்பு சட்டத்தின் வழி வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க உடனே இதை செய்யுங்க! அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி

இந்த நாளில் சமூக சமத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிக்கும், எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடிய உரிமை உண்டு. சிதம்பரம் தொகுதியில் பாஜகவும் போட்டியிடலாம். அதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை பகைவர்களை அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் எப்படி எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி எதிர் கொள்வோம். தமிழ்நாட்டில் பாஜகவை தனிப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற அரசியலை தொடர்ந்து முன்னெடுப்போம். இந்திய அளவிலும் இதை விரிவுபடுத்துவோம். அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை.

இதையும் படிங்க: பாஜகவின் கைப்பாவை ஆளுநர் ஆர்.என்.ரவி.. இது பச்சை துரோகம்.. வைகோ ஆவேசம்..!

அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். ஆதாரமில்லாத அவதூறுகளை அதிமுகவினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆதாரத்தோடு புகார்களை முன்வைக்க வேண்டும். அதை ஆளுங்கட்சி, திமுக அரசு எதிர்கொள்ளும். ஆதாரம் இருந்தால் சட்டப்படி அணுகட்டும். மக்களின் பிரச்சினைகள் குறித்து களப்பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். தேர்தல் பணியை உரிய நேரத்தில் தொடங்குவோம். அதற்கு இப்போது அவசியம் இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தமிழக அரசு பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருவதால் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios