பாஜகவின் கைப்பாவை ஆளுநர் ஆர்.என்.ரவி.. இது பச்சை துரோகம்.. வைகோ ஆவேசம்..!
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசு மறு சீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம். மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசு மறு சீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிரபாகரனின் 68வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ;- அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும், ஊதுகுழலாகவும் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய்.
இதையும் படிங்க;- ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாதா..? மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கமுடியாது- சிபிஎம்
அவர் தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மோடி காசி தமிழ் சங்கமம் என்கிற பெயரில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள். இப்படி எத்தனையோ பேர் முயற்சி செய்து தோற்றுப்போயுள்ளனர்.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசு மறு சீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம். மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது எனவும் வைகோ விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க;- இந்துத்துவா பிரச்சாரம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! கொந்தளிக்கும் வைகோ - பின்னணி என்ன ?