ஏழைகள் வைத்தியம் செய்வதை கூட இந்த விடியா அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வெளுத்து வாங்கும் இபிஎஸ்.!
வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடலூர் மாவட்டம் வல்லம் படுகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடலூர் மாவட்டம் வல்லம் படுகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது, பேசிய இபிஎஸ்;- கடலூர் மாவட்டத்தில் எப்போதெல்லாம் பருவமழை வருகிறதோ அப்போதெல்லாம் இப்பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அதிமுக நேசக்கரம் நீட்டி வருகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கியுள்ளது. அம்மா மினி கிளினிக், மடிக்கணினி உள்ளிட்ட ஏழைகளுக்காக கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு படிப்படியாக நிறுத்தி உள்ளது. ஆனால் ஏழைகள் வைத்தியம் செய்வதைக் கூட இந்த விடியா அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. திராவிட மாடல் அரசை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்.!
தற்போது நகரப்புற மருந்தகம் என நேற்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். கிராமத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு, திட்டத்தின் பெயரை மற்றும் மாற்றிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஏழைகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- திராவிட மாடலா.? வெறுப்பு மாடாலா..? வாக்குறுதிக்கு எதிராக இரட்டை வேடம் போடும் திமுக..! ஓபிஎஸ் ஆவேசம்