தூய்மை பணியாளர்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமானது.
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான வழக்கை தொடர்ந்ததே திமுக நிர்வாகி ஒருவரும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு சொந்தமான டிரஸ்ட் நிர்வாகமும்தான் என அதிமுக அதிமுக தரப்பில் புகார் கிளப்பப்பட்டுள்ளது.
கடந்த 13 நாட்களாக சென்னை மண்டலம் 5,6- ஐச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள், பணி நிரந்தரம் கேட்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்டி போராட்டங்களை மேற்கொண்டனர். அடன்பிறகு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொது நல வழக்குத் தொடர்ந்தது யார் தெரியுமா என அதிமுக ஐடி விங் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா? திமுக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி! இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா? பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது. [துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்] இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று?
யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு, நரி தந்திரம் செய்து அவர்களை நடுஇரவில், காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக!
தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தூய்மை பணியாளர்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமானது. இப்போது தெரிகிறதா தூய்மை பணியாளர்களை போராட்டத்தில் இருந்து வெளியேற்றியது யார் என்று?’’ என பகீர் கிளப்பியுள்ளது.
