- Home
- Cinema
- ரஜினியே கிடைத்தும் சொதப்பிவிட்டாரா லோகி..? கலைந்தது ரூ.1000 கோடி கனவு..? நிம்மதியை இழந்த ரஜினி..!
ரஜினியே கிடைத்தும் சொதப்பிவிட்டாரா லோகி..? கலைந்தது ரூ.1000 கோடி கனவு..? நிம்மதியை இழந்த ரஜினி..!
கூலியை விட ஜெயிலர் பெட்டரான படம். இந்த படம் ஒரேடியாக ப்ளாப்படமும் கிடையாது, ரசிகர்களை சோர்வடைய வைத்த படமும் கிடையாது. ரஜினியே கிடைத்தும் லோகேஷ் பயன்படுத்தவில்லை.

கூலி படம் வெளியாகி ஒரு நாளே ஆகியிருக்கிறது. ஆனால் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், திரைக்கதை பலவீனமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ரூ.1000 கோடி வசூல் எல்லாம் செய்ய முடியாது எனக் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் கூலி படம் குறித்து சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன் கூறுகையில், ரஜினியுடைய இந்த கேரக்டரே பிணம் எரிப்பவராக காட்டி விட்டார்களே என்பது எனக்கே வருத்தமாக இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்று எனக்கு தெரியாது. சந்தர்ப்பவசத்தால் அந்த வேலையை அவர் செய்கிறார். அது வேற. ஆனால் ரஜினிக்கு என்று ஒரு கேரக்டர் கொடுக்கும்போது பல படங்களில் அவர் மூட்டை தூக்குபவர்களாக நடித்திருக்கிறார். டாக்ஸி டிரைவராக நடித்து இருக்கிறார். அதெல்லாம் வேற. இந்த தொழிலை தவறாக சொல்வதாக பல சண்டைக்கு வருவார்கள். நான் அப்படி சொல்ல வரவில்லை. நீங்கள் இவ்வளவு மாஸான ஒரு ஹீரோவை காட்டும்போது அவருக்கென்று சில விஷயங்கள் எல்லாம் இருக்கிறது அல்லவா. அந்த மாதிரி இதில் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
சத்யராஜை சயின்டிஸ்ட் என காட்டிவிடுகிறார்கள். ஏதோ ஒன்றை அவர் கண்டுபிடிக்கிறார். அது இதுவரை இல்லாத ஒன்றா என்றால் அது இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறது. அங்கே படுக்க வைத்து செய்கிறார்கள். இங்கே உட்கார வைத்து செய்கிறார்கள். இது அவசியமா எனக் கேட்கிறேன். நாகர்ஜுனா அவ்வளவு பெரிய தாதா. துறைமுகத்தையே கையில் வைத்திருக்கிறார். அவரால் கயிறு கட்டி, கல்லை கட்டி பிணத்தை கடலில் போட முடியாதா? அதுக்காக ஒருத்தரை கடத்திக் கொண்டு வருகிறார்கள். அவர் இல்லை என்றால் அந்த மிஷினை யாராலும் இயக்க முடியாது என்றெல்லாம் பில்டப் பிடிக்கிறார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் படம் முழுக்க அதை நேர்த்தியாக கொண்டு செல்ல வேண்டும். இதை ஆபரேட் செய்யவே அவரைத் தவிர யாருக்கும் தெரியாது என்கிறார்கள். அவ்வளவு பட்டன் வைத்திருக்கிறார்கள். நீ ஏதாவது செய். நான் ஏதாவது செய்கிறேன் என்று ரஜினியும், ஸ்ருதியும் சொல்லிக் கொள்கிறார்கள். அடுத்து ஒரு அரை மணி நேரத்தில் அந்த படத்தில் ஒரு அடியாள் அந்த மிஷினை ஆபரேட் செய்கிறான். அவனுக்கு மட்டும் இது எப்படி தெரிகிறது? ஆக்ஷன் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஆனால் இதெல்லாம் கண்ணை துருத்திக் கொண்டு நிற்கிறது. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாமே என்று சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அதைத்தான் நான் கேட்கிறேன்.
நீங்கள் டேபிளில் உட்கார்ந்து எழுதும்போது அதை இன்னும் நன்றாக செய்திருக்கலாமே. படத்தில் சொல்வது போல உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன்... உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று நாகர்ஜூனா சொல்வாரே அதுபோல ஒவ்வொரு காட்சி முடியும் பொழுது அதை இப்படி செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என்று தோன்றி கொண்டு இருக்கிறது. எல்லா கேரக்டரையும் சரியாக பொருத்தி இருப்பதுதான் இந்த படத்தில் பெரிய சவால். எல்லோருக்கும் ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் நேரத்தை படத்தில் குறைத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தில் சௌபிர் தான் ஹீரோவாக இருக்கிறார்.
ரஜினியை செகண்ட் ஹீரோ மாதிரி ஆக்கி இருக்கிறார்கள். அது ரஜினியின் பெருந்தன்மை. இந்த படத்தில் சௌபீர்தான் நிறைய ஸ்கோர் செய்கிறார். எப்பொழுதும் வில்லன் கேரக்டர் ஸ்கோர் பண்ணும் என்பது வேறு. ஆனால், ரஜினி முன்னாடி ஒருத்தர் நிற்கும் போது ரஜினிகாந்த் எப்போதும் டாப்பில் இருப்பார். ரஜினிக்கு அடுத்தது தானே மற்றவர்கள் வரிசையில் வர வேண்டும். ஆனால் கூலியில் அப்படி இல்லாமல் போய்விட்டது.
உபேந்திராவை எல்லாம் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். கன்னடத்தில் அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஹீரோவாக இருக்கிறார். அவரை ரஜினி ஒழித்து வைத்திருப்பதைப் போல காண்பிக்கிறார்கள். நாகர்ஜுனா கேரக்டர் எல்லாம் நன்றாக இருந்தது. ஒரு முழு வில்லன் ரோல் செய்து இருக்கிறார், கரெக்டாக செய்திருக்கிறார். அமீர்கான் போர்ஷனே தேவை இல்லை. அவர் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. வட இந்தியாவில் படத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக அமீர் கானை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பணம் முடிந்த பிறகு அந்த கேரக்டர் தனியாக தொங்குகிறது. சில நேரம் சவுரி முடி கழன்று தொங்குமே. அதைப்போல் இருக்கிறது.
திரைக்கதை ஸ்கிரிப்பாக இல்லை. ரஜினியுடைய என்ட்ரி எங்கே இருந்திருக்க வேண்டும் என்றால் ‘தொட்ரா அவங்கள’ இன்று ஒரு டயலாக் வரும். அதற்கு பிறகு தான் ரஜினியை காண்பித்து இருப்பார்கள். அங்கிருந்துதான் கதையே இருந்திருக்க வேண்டும். எல்லோரும் சொன்ன ஆயிரம் கோடி வசூல் என்பதை லோகேஷ் கனகராஜ் எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. ஆயிரம் கோடி வசூல் என்று அவரும் சொல்லவில்லை. சன் பிக்சர்ஸும் சொல்லவில்லை. மூன்றாம் நபர்கள் யார் யாரோ சொன்னதை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், பொன்னியின் செல்வன் அளவுக்கெல்லாம் பார்ட் -1 வந்தது போல் எல்லாம் இல்லை, இருக்காது. பாகுபலி போல் கலெக்சன் எல்லாம் இந்தப் படத்தில் இருக்காது, வாய்ப்பு இல்லை.
கூலியை விட ஜெயிலர் பெட்டரான படம். இந்த படம் ஒரேடியாக ப்ளாப்படமும் கிடையாது, ரசிகர்களை சோர்வடைய வைத்த படமும் கிடையாது. ரஜினியே கிடைத்தும் லோகேஷ் பயன்படுத்தவில்லை. ரூ.1000 கோடி வசூல் கனவு எல்லாம் கலைந்து விடும்’’ எனத்தெரிவித்துள்ளார்.