ஓபிஎஸ்ஸின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நின்றது குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டுதான் ஓபிஎஸ் அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தார் என்று கூறியுள்ளார்.

அதிகார மோதல் காரணமாக அதிமுகவானது பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கும்- முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் தம்பி துரை ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அவமரியாதை செய்த்தாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைக்கான பன்பு இல்லையென கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.

எடப்பாடியார் எழுச்சி பயணம் வெற்றி பெற்றுள்ளதால் ஒ.பி.எஸ் அரசியல் காழ்புணர்ச்சியோடு எடப்பாடியாரை விமர்சனம் செய்கிறார், அதிமுக தொண்டர்கள் குறித்து கவலைப்படும் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்கும் பொழுது ஒ.பி.எஸ் ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் அதிமுகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுட்டு இருக்க மாட்டார். இன்றைக்கு ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் பற்றி கவலைப்படு கவலைப்படுவதற்கு முன்பாக தங்களை வளர்த்த இரட்டை இலை சின்னத்தை நாம் எதிர்த்து நிற்கிறோமே, இந்த இரட்டை இலை எதிர்காலம் என்ன ஆகும்? கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்?

கட்சி தொண்டர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? 52 ஆண்டு ஆண்டுகளாக இந்த இயக்கம்தான் உலகம், எம்ஜிஆர் தான் உலகம், அம்மா தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த தொண்டர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் அவர் நினைத்துப் பார்த்திருந்தால் இந்த இயக்கத்திற்கு இவ்வளவு சோதனைகள், எவ்வளவு தடைகள், எவ்வளவு சத்திய சோதனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. தன்னை அடையாளம் காட்டி இந்த இயக்கத்தை, தன்னை உயர்வு பெற்ற இயக்கத்திற்கு நன்றியோடு அம்மா காட்டிய வழியிலே, எம்ஜிஆர் காட்டிய வழியிலே நாம் நடந்து சென்று இருக்கிறோமா? எத்தனை முறை தடம் புரண்டு இருக்கிறோம் ?எத்தனை முறை தடம் புரண்டு இருக்கிறோம்? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். எடப்பாடியாரின் ஆளுமை பற்றி தமிழ்நாட்டு மக்கள்,அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு தான் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஓபிஎஸ் தான் முன்மொழிந்தார்,

எடப்பாடியாரை முன்மொழிந்து தான் தேர்தலை சந்தித்தார் அதனால் இரட்டை இலையில் வாக்குகளை பெற்றோம். எடப்பாடியாரை முதலமைச்சராக இருந்த போது தான் ஓபிஎஸ் நான்கரை ஆண்டு காலம் துணை முதலமைச்சர் மற்றும் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் பணியாற்றினார்கள் அப்போதெல்லாம் எடப்பாடியார் ஆளுமை பற்றி தெரியாதா? ஒ.பி.எஸின் கருத்துக்கள் அவருடைய இயலாமையை காட்டுகிறது, தடம் புரண்டு சென்ற ஓபிஎஸின் கருத்துக்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை, ஓபிஎஸின் கருத்துக்கள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது,

தடம்புரண்டு சென்ற ஒ.பி.எஸின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதிமுகவினருக்கு எம்ஜிஆர், அம்மா கற்றுக்கொடுத்த அரசியல் நாகரீகத்தை புதிதாக யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை. ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.