அரசியலுக்கு முழுக்குப்போட்ட கையோடு தீபா - மாதவன் ஜோடி நேசத்தோடு வலம் வருவதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அரசியலின் ஆழம் தெரியாமல் குதித்த தீபா முதலில் தனது பெயரிலேயே எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். அடுத்து தீபாவின் நடவடிக்கைகளும் அவரை சுற்றி இருந்தவர்களின் செயல்பாடுகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவரது கார் ஓட்டுநர் ராஜா மற்றும் கணவர் மாதவன் ஆகியோர் இடையேயான மோதல் ஊடகங்களில் வெளியாகி தீபா பேரவையை மேலும் டேமேஜ் ஆக்கியது. 

தொடர்ந்து தீபா பேரவை கேலியாக பேசப்பட்டு வந்தது. இருந்த கொஞ்சநஞ்ச தொண்டர்களும் பேரவையின் மோசமான செயல்பாடுகளால் விலகிச்சென்றனர். கிட்டத்தட்ட அப்படியொரு பேரவை இன்னமும் இருக்கிறதா? என கேள்வி எழும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜெ.தீபா தனது அரசியலுக்கு முழுக்கு போடும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன் என எச்சரித்து இருந்தார்.

இதையும் படிங்க:- அரசியலில் இருந்து விலகி அதிரடி... சசிகலா சம்மதத்துடன் லண்டனில் குடியேறும் தீபா..!

இந்நிலையில், தீபா மாதவன் ஜோடி குறித்து ரேடியோ சிட்டி வர்ணனையாளர் ராஜவேல் நாகராஜன் தனது முகநூல் பதிவில், ‘’இரு வாரங்களுக்கு முன் மாலை 5 மணி வாக்கில் தி.நகரில் இருக்கும் கீதா கபேயில் அந்த தம்பதியை பார்த்தேன். சோலா பூரியை சாப்பிட்டுவிட்டு கணவரின் தட்டில் இருந்து பேப்பர் ரோஸ்ட்டை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அந்த மனைவி. கணவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். தம்பதிகள் கண்களாலேயே ஒரு காதல் கடிதம் படிக்க, கீதா கபே கௌதம் மேனன் பட காபி ஷாப்பாக மாறிக்கொண்டிருந்தது. அப்போது நினைத்தேன் ஏன் இவங்களுக்கு இந்த அரசியல் எல்லாம் என்று..!? 

இதோ தீபா அறிவித்து விட்டார்கள். அரசியலில் இருந்து விலகுவதாக. இனி தீபாவும் மாதவனும் கூட்டணி பயங்கள் இல்லாமல், கொள்கை விளக்க கூட்டங்களின் தொல்லைகள் இல்லாமல் கீதா கபேயில் எப்போது வேண்டுமானாலும் சோலா பூரியும், பேப்பர் ரோஸ்டும் சாப்பிடலாம். ஊடகங்களே, அந்த காதல் ஜோடிகள் இனியாவது இளைப்பாறட்டும். விட்டுவிடுங்களேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:-படுதோல்வியிலும் துவளாத டி.டி.வி... அதிமுகவை கைப்பற்ற ரகசிய சந்திப்பால் எடப்பாடி அதிர்ச்சி..!