ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி தந்த பூரிப்பில் இனி அதிமுக தன் வசப்படும் எனக் காத்திருந்தார் டி.டி.வி. மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றி தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்ற அவரை செல்லாக்காசாக்கி விட்டது தேர்தல் முடிவுகள். 

இதையும் படிங்க:- தங்க தமிழ்ச்செல்வன் மீது தீராத ஆத்திரம்... ஓடாநிலையில் திட்டித் தீர்த்த டி.டி.வி..!

தேர்தலுக்கு முன்பாக தன்னுடைய நிழலாக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் அதிமுகவுக்கு தாவ, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவுக்கு மாறி மாறி தாவியதில் திக்குமுக்காடி வருகிறார் டி.டி.வி. அடுத்து குடும்பத்திற்குள்ளும் இளவரசி மகன் விவேக் எதிர்ப்பும் அவரை வாட்டத்தில் தள்ளியுள்ளது.

சசிகலாவும் டி.டி.வி.தினகரன் நடவடிக்கைகளை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லியும் கேட்காததால் ஒதுக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனாலும், அசராமல் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார் டி.டி.வி. தனது ஆதரவாளர்களை சந்திக்கிறேன் என்ற பெயரில் அதிமுக முக்கிய தலைவர்கள், அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களை ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். 

இதையும் படிங்க:-அரசியலில் இருந்து விலகி அதிரடி... சசிகலா சம்மதத்துடன் லண்டனில் குடியேறும் தீபா..!

அவர்களும் பொதுக்குழுவில் இன்னும் உயிர்ப்புடன் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான். எப்படியும் ஆண்டு இறுதிக்குள் செயற்குழு, பொதுக்குழு கூடும்போது தனது ஸ்லீப்பர் செல்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தும் சிறையில் இருக்கும் சசிகலாவின் திட்டம் எனவும் கூறுகிறார்கள். இந்தத் தகவல் அதிமுக தரப்புக்கு தெரிய வந்ததும், பொதுக்குழு உறுப்பினர்களை சரிகட்டும் பணி தனியாக நடந்து வருகிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.