ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் திகைத்து நின்ற அவரது தொண்டர்களுக்கு தீபா அடுத்த ஜெயலலிதாவாக தென்பட்டார். இதனையடுத்து அவரது வீட்டில் தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது. அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பால் தீபா ஊடக வெளிச்சத்தில் ஜொலித்தார். இதனை பயன்படுத்தி அரசியலின் ஆழம் தெரியாமல் குதித்த தீபா முதலில் தனது பெயரிலேயே எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவை ஒன்றை ஆரம்பித்தார்.

தொடக்கத்தில் இந்த பேரவை ஓரளவுக்கு செயல்பட்டாலும் தீபாவின் நடவடிக்கைகளும் அவரை சுற்றி இருந்தவர்களின் செயல்பாடுகளும்  கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. அவரது கார் ஓட்டுநர் ராஜா மற்றும் கணவர் மாதவன் ஆகியோர் இடையேயான மோதல் ஊடகங்களில் வெளியாகி தீபா பேரவையை மேலும் டேமேஜ் ஆக்கியது. தொடர்ந்து தீபா பேரவை கேலியாக பேசப்பட்டு வந்தது. இருந்த கொஞ்சநஞ்ச தொண்டர்களும் பேரவையின் மோசமான செயல்பாடுகளால் விலகிச்சென்றனர்.

இதையும் படிங்க/:- படம் பார்த்து இளைஞருக்கு டார்ச்சர்... மன்னிப்பு கேட்ட ஆபாச குயின் சன்னி லியோன்..!

கிட்டத்தட்ட அப்படியோரு பேரவை இன்னமும் இருக்கிறதா? என கேள்வி எழும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜெ.தீபா தனது அரசியலுக்கு முழுக்கு போடும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன் என எச்சரித்தார்.

இந்நிலையில், தீபா லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சில தகவல்கள் வருகின்றன. லண்டன் செல்லும் அளவுக்கு தீபாவின் பொருளாதார பின்னணியில் சசிகலா இருப்பதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் இருக்கும் போதே தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக்கிற்கு சில உதவிகள் செய்ததாகவும் தற்போது சசிகலாவின் சம்மதத்துடனே தீபா பேரவையை கலைத்துவிட்டு லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபா லண்டனிலேயே குடியேற உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 

இதையும் படிங்க:- மனைவியின் கற்பை அடகு வைத்து சூதாட்டம்... இளம்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்..!

பாவம் டிரைவர் ராஜாவின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. ஒருவேளை இனியும் டார்ச்சர் செய்தால் போய்விடுவேன் என எச்சரித்தது பேரவை உறுப்பினர்களுக்கு அல்ல... டிரைவர் ராஜாவுக்கு என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.