Cooker Blast: அரசியல் கட்சியினர் பரிசாகக் கொடுத்த குக்கர் வெடித்து பெண் காயம்

பெங்களூருவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குக்கர்களை வழங்கி வாக்காளர்களை ஈர்க்க முயல்கின்றனர். அவர்கள் கொடுத்த குக்கர் ஒன்று சமைக்கும்போது வெடித்துவிட்டது.

Cooker gifted by politicians to woo voters, blasted while cooking

பெங்களூருவில் வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சியினர் வழங்கிய மட்ட ரகமான குக்கர் வெடித்துச் சிதறியதில் பெண் காயம் அடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளராகக் களமிறங்கும் ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள் மக்களைக் கவர பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுபோல பரிசுப்பொருட்களைக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூரு சோமேஸ்வரா காலனியிலும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமையல் குக்கர்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். அப்படி வழங்கப்பட்ட குக்கர் ஒன்று சமைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறிவிட்டது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் தெரியுமா..? உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Cooker gifted by politicians to woo voters, blasted while cooking

திமுக அமைச்சர்கள் சைகோபோல பேசுகின்றனர் - பிரேமலதா காட்டம்

காயமடைந்த அந்தப் பெண் அரசியல்வாதிகள் கொடுத்த குக்கர் தரம் தாழ்ந்ததாக இருந்ததால்தான் சில நாட்களுக்குக்கூட தாக்குப்பிடிக்காமல் வெடித்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார்.

அந்தப் பகுதியில் குக்கர்களை விநியோகம் செய்வதற்காக அரசியல் கட்சியினர் உள்ளூர் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான குக்கர்களை ஆர்டர் செய்துள்ளனர். 5 லிட்டர் குக்கரை 400 முதல் 450 ரூபாய் விலையில் வாங்கியுள்ளனர். விலை குறைவாக இருப்பதற்கு ஏற்ப அதன் தரமும் மட்டமாக இருப்பதாக அவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் ஆர்வத்தில் குக்கர்களை வழங்கி வாக்காளர்களை கவரப் பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் வழங்கும் மலிவான குக்கர்கள் வெடித்துச் சிதறி மக்களைப் பதம் பார்க்கின்றன. மக்கள் இதுபோன்ற பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்வதற்கு முன் சற்று சிந்திக்க வேண்டும். உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய தரம் குறைந்த குக்கர்களை வாங்கிக்கொண்டு வாக்குகளை விற்கவேண்டிய அவசியமில்லை.

பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios