திமுக அமைச்சர்கள் சைகோபோல பேசுகின்றனர் - பிரேமலதா காட்டம்

திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவர்க்கும்  பேரன் பேத்திகள்  உள்ள நிலையில் மக்களை பற்றி சிந்திக்காமல் ஆண்மையின் அதிகாரம் குறித்து ஒருவருக்கு ஒருவர் வாசைப்பாடி கொள்வதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

dmdk treasurer premalatha vijayakanth slams dmk ministers

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இரண்டாவது நாளாக வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்குத் தொகுதி முதன்முறையாக உதயமாகிய போது அதன் சட்டமன்ற உறுப்பினராக தேமுதிக இருந்தது. மக்களை ஆடு, மாடு போல் பட்டியலில் அடைத்திருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி பணத்தையும், பொருளையும் வாரி வழங்குகிறார்கள். அதனை தேர்தல் அதிகாரிகளோ, இங்கு வந்துள்ள துணை ராணுவ படையோ ஒருவரை கூட பிடிக்கவில்லை. துணை ராணுவம் எதற்கு இங்கே வந்துள்ளார்கள் என்றே தெரியவில்லை.

பல இடங்களில் மக்களை ஆட்டு மந்தையை அடைப்பது போல் அடைந்து வைத்துள்ள ஒரு இடத்திற்கு துணை ராணுவம் செல்லவில்லை. டாஸ்மாக் கடையை மூடுவோம் என கூறியவர்கள் இன்று அதை பற்றி பேசுவதே இல்லை. பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுகவை மக்கள் புறக்கணித்து, தேமுதிகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

தாத்தாவான இந்நாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் மீசை வைத்த ஆம்பளையா என பேசுவது தேவையா? மின்கட்டணம் ராக்கெட் வேகத்தில் ஏறியுள்ளது. தேர்தலின் போது திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பெண்களுக்காக என்றும், எப்போதும் சகோதரியாக துணை நிற்பேன். தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பை தர வேண்டும். 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் தெரியுமா..? உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திமுக அமைசார்கள் சைகோவாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள், மக்களின் ஏழ்மையையும், வறுமையையும் பயன்படுத்தும் திமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.

பேனா நினைவு சின்னத்திற்கு எத்தனை பேர் ஆதரவுனு தெரியுமா.? வெளியான அறிக்கை.! களத்தில் இறங்கும் திமுக அரசு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios