23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!
இன்றைய காங்கிரஸ் நிலை இதுதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியின் 71வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுடன் கே.எஸ் அழகிரி பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கரிகாலச் சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழன், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் இப்படியாக தமிழகத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களால் தமிழும் வாழ்ந்தது, தமிழகமும் புகழ்பெற்றது. தமிழர்களுடைய புகழ் இன்று உலகம் முழுமைக்கும் கொடிகட்டி பறக்கிறது என்று சொன்னால் இவர்களெல்லாம் எல்லாம் ஒரு காரணம்.
இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?
ஆனால் சென்ற முறை தமிழகத்தின் ஆளுநராக இருந்த புரோகித் இன்று பஞ்சாபில் சொல்லியிருக்கிறார். நான் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பொழுது மிகுந்த அவமானத்திற்குட்பட்டேன். துணைவேந்தர் பதவிகள் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை சீர்திருத்த நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று தமிழகத்தின் பெருமையை அவர் பஞ்சாபில் பறைசாற்றி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான்.
எதற்காக இந்த ஆட்சி நாம் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னோம் என்றால் அவர்கள் இவ்வாறெல்லாம் நடந்தது கொண்டதுதான். தமிழகத்தை கொள்ளை அடித்தார்கள், சூறையாடினார்கள், பாதுகாப்பிற்காக மோடி உடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
அதே ஆளுநர் வேறொன்றும் சொல்லியிருக்கிறார் தமிழகத்தை பார்த்து எப்படி ஆள வேண்டும் என்பதை பஞ்சாப் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இது நமக்கு கிடைத்திருக்கும் பெருமை. பொது மக்களின் ஏகோபித்த தலைவர் என்றாலும் மகாத்மா காந்தி தான்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
ஆங்கிலேயர்களால் மகாத்மாவை மீறி ஆர்.எஸ்.எஸ்-ன் கையில் இந்த நாட்டின் சுதந்திரத்தை இந்த நாட்டின் கையில் வழங்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸிடம் அடைந்த தோல்விக்காக என்று எப்படியாவது இந்தியாவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் 70 ஆண்டுகால பகை உள்ளது.
வடிவேலு படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி போல் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. நம்மிடம் வாளும் இல்லை, படையும் இல்லை. அதனால் வரக்கூடிய தேர்தல் யுத்த களத்தில் பாஜகவினரை கடுமையாக எதிர்க்க பூத் கமிட்டி அமையுங்கள். கூட்டணியில் ஒரு எம்எல்ஏ, எம்பி சீட் பெற்றுவிடலாம் என கற்பனையில் வாழாமல் இனி கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!