தமிழகத்தில் ஆளுநராக 4 ஆண்டுகள் இருந்தது மிக கொடுமை.. துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை.. பன்வாரிலால்.!
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 - 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தமிழகத்திற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்து வந்தார். அடுத்ததாக பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
பிறகு தமிழகத்துக்கு ஆர்.என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சமீபத்திய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் மிக மோசமாக இருந்ததாகவும், தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 - 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
அதேநேரத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்தேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பஞ்சாபில் யார் திறமையானவர் ? திறமையற்றவர் ? என்று கூட எனக்குத் தெரியாது. கல்வி மேம்படுவதை நான் பார்க்கிறேன்’ என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?