முதல்வர் ஸ்டாலின் ரெடி.. ராகுல் காந்தியும் ரெடி.! ஆட்சி மாற்றம் நிச்சயம் - கே.எஸ் அழகிரி அதிரடி !
கட்சியிலிருந்து விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக மோடியின் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள ஒற்றுமை நடை பயணம் குறித்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே வி தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, ‘மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகள் காரணமாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கு கீழ் சென்று விட்டதாகவும், மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகித்ததிற்கு மேல் இருந்தது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், 'பாஜக ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி, விவசாயம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது.
கட்சியிலிருந்து விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக மோடியின் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியலில் கொள்கைகளுக்கு எதிராக பேசலாம் ஆனால் அண்ணாமலை வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.
தமிழக அமைச்சர்கள் குறித்து அவர் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறையை தூண்டுவதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை. பிரிவினையை தூண்டி ஆதாயம் பார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தை தோழமைக் கட்சிகள் புறக்கணிக்கப்பதாக வெளியாகி வரும் தகவல் முழுக்க முழுக்க தவறானது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடி எடுத்து கொடுத்த பின்னரே ராகுல்காந்தி தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதில் தோழமைக்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். ராகுல்காந்தியின் இந்த ஒற்றுமை நடைபயணம் மக்கள்மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும்’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !