இரு குடும்பங்களுக்கும் கோபாலபுரம் வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்கிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

cm stalin tweets about gopalapuram house

இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முன்னதாக கோபாலபுரம் வீட்டை கருணாநிதிக்கு விற்பனை செய்த குடும்பத்தினர் அந்த வீட்டை பார்வையிட வந்திருந்தனர். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், வீடு என்பது பலரது கனவு. கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.

இதையும் படிங்க: சினிமாவில் ரஜினி, சிவாஜியையே மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்.. யாருக்கும் அதிமுகவில் இடமில்லை - தடாலடி ஜெயக்குமார்!

எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் அவர்களிடம் 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்கே உண்மையாக இல்லாதவர் ஓபிஎஸ்...! திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க துடிக்கிறார்- இபிஎஸ் ஆவேசம்

cm stalin tweets about gopalapuram house

வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட தலைவர் கலைஞர் ஒப்புக்கொண்டார். அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios