எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் தரையிலே இருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமியை வெளுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

‘எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

Chief minister mk stalin slams aiadmk edappadi palaniswami-rag

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22-10-2023) திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு, “நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க, அந்தத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்திய மண்டல மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியிலும் - தென் மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் இராமநாதபுரத்திலும் - மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் திருப்பூரிலும் நடந்தது.

இப்போது உங்களுடைய முகங்களை பார்ப்பதற்காகவே இந்த வடக்கு மண்டல மாநாட்டிற்கு கழகத்தின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நான் வந்திருக்கிறேன்.  ஒளி மிகுந்த ஊரில் உங்கள் முகங்களில் எல்லாம் உதயசூரியனின் ஒளியை பார்க்கிறேன். தினமும் காலையில் சூரிய ஒளியை பார்க்கும்போது என்ன மாதிரியான உற்சாகம் ஏற்படுமோ, அதே மாதிரியான உற்சாகம்தான் உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது! உற்சாகம் என்று சொல்வதைவிடப் புதியதொரு உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

Chief minister mk stalin slams aiadmk edappadi palaniswami-rag

ஒரு நாள் முழுவதும் – ஒரு வாரம் முழுவதும் - ஓய்வில்லாமல் உழைத்தாலும், அடுத்த நாள் கழக உடன்பிறப்புகளின் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்துவிடும். ஏன் என்றால், நீங்கள்தான் ”சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!” இந்தப் பாசப்பிணைப்பை ‘உடன்பிறப்பே…’ என்ற ஒரே ஒரு சொல் மூலமாக உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும்! யாராலும் பிரிக்க முடியாது.

பல்வேறு வரலாற்றை நம்மடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று, இரண்டை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் இதே திருவண்ணாமலையை சேர்ந்த நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ப.உ.சண்முகம் அவர்கள் வழங்கியது. 1957 தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றோம். அதில், 3 பேர் இந்த மாவட்டத்துக்காரர்கள்! முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றார்கள்.

திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு - ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. நீங்கள் மறந்துவிட கூடாது. 

உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் ஒருவராக மாற வேண்டும். முதலில், உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவம்தான் இப்போது, உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு உங்களிடம் சீக்கிரமாக வந்து சேரும். வாக்காளரின் பெயர், வயது, அவர்கள் குடும்பத்தினர் யார் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியை சார்ந்தவர் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். தினமும் ஒருமணி நேரத்தைக் கழகத்துக்காக ஒதுக்குங்கள். ஒதுக்குவீர்களா?

Chief minister mk stalin slams aiadmk edappadi palaniswami-rag

அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். 
யாருக்கு என்ன தேவையோ அதை பெற்றுத் தாருங்கள். முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதலில் உதவி, இவ்வாறு என்ன உதவி தேவை என்று கேட்டு நிறைவேற்றித் தாருங்கள். இதனைச் செய்து தர உங்கள் பகுதியின் ஒன்றிய – நகர – பேரூர் கழகச் செயலாளர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ அல்லது அமைச்சர்களையோ நீங்கள் அணுகுங்கள். 

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரிடமும், குறிப்பாக அமைச்சர்களிடமும் கட்டாயமாகச் சொல்லுவேன். நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.  ஒவ்வொரு நாளும் பத்து வீட்டுக்குப் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் பூத்தில் இருக்கும் அத்தனை வீட்டிற்கும் சென்று வந்துவிடலாம். ஒரு சிலர் வரவேற்கவில்லை என்றாலும் திரும்ப திரும்ப செல்லுங்கள். நம

்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எல்லார்க்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய திட்டங்களால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒருவிதத்தில் பயனடைகிறது. அப்படி பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நம்முடைய ஆட்சிமீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 

ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்த பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் கண்டுகொண்டாரா?  அரசு ஊழியராக இருக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக்கியது நம்முடைய தி.மு.க. ஆட்சி!  ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே! தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது! 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Chief minister mk stalin slams aiadmk edappadi palaniswami-rag

நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல! அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்! அவரின் ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறைகயிலும் முதலிடம் பிடித்ததாம். பழனிசாமி சொல்கிறார். நாம் கேட்பது, சொந்தமாக விதைத்து அறுவடை செய்வதுதான் பெருமை! 

மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் - போராடிய ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் பேசிய – போலி விவசாயி பழனிசாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?  உண்மையில், அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது! இதுதான் வரலாறு!  போதைப் பொருளான குட்கா விற்க லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டிற்கே ரெய்டு வந்ததை மறைக்க முடியுமா? சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல், பொல்லாத ஆட்சி - அதற்குப் பொள்ளாச்சியே சாட்சி என்று தமிழ்நாடே கொதித்ததே மறந்துவிட்டதா? பொள்ளாச்சி பாலியல் கொடுமை நெஞ்சில் ஈரம் இருக்கும் எல்லோரையும் கதற வைத்தது… ஆனால் பழனிசாமி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை… இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இதையெல்லாம் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் திருவாளர் பழனிசாமி. 

தி.மு.க. குடும்பக் கட்சியாம்! ஆமாம், குடும்பக் கட்சிதான்! அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், தி.மு.க. குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை வாழவைக்கும் கட்சி, தி.மு.க. பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய பாதையில், ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கிய கட்சி, தி.மு.க.!  பச்சைப் பொய் பழனிசாமி அவர்களே! சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, ஹைகோர்ட் – சுப்ரீம் கோர்ட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்! பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி.

Chief minister mk stalin slams aiadmk edappadi palaniswami-rag

அதை எதிர்த்த தி.மு.க.வினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார், பா.ஜ.க.விற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்! “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்” என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, ‘கூட்டணி தர்மம்’ என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார். 

ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள், "மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார்?" பா.ஜ.க.வை விமர்சிக்காமலேயே பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம்! இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும்.

தேர்தல் என்ற போர்க்களம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நிலத்தில் அதிகமான போர்கள் நடந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்!  முதலாம் தெள்ளாற்றுப் போர் – இரண்டாம் தெள்ளாற்றுப் போர் – திருவண்ணாமலைப் போர் – வந்தவாசிப் போர் – தேசூர்ப் போர் – ஆரணிப் போர் – செங்கம் கணவாய்ப்போர் – சேத்துப்பட்டில் போர் என்று வரிசையாக எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்த ஊர், இந்தத் திருவண்ணாமலை வட்டாரம்! 

இப்போது நாம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப் போகும் வெற்றிதான் - எதிர்கால இந்தியாவிற்கு மிக மிக முக்கியம்!  100 ஆண்டு காலமாக சமூகநீதியின் மூலமாக தமிழ்நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடையத் தொடங்கியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எத்தனையோ முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. தொடர்ந்து இப்போது இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் கோட்பாடானது.

இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால் - உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும்! மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பா.ஜ.க.விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்திற்கு இந்தத் திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும். நிறைவாக, தீபம் தெரிவதைப் போல - இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க! இந்தியா கூட்டணி வெல்க! நாற்பதும் நமதே! நாடும் நமதே" என்று பேசினார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios