Asianet News TamilAsianet News Tamil

தக்காளி பெட்ரோலோடு போட்டி போடுகிறது; இனியும் வேடிக்கை பார்க்க வேண்டாம் - மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

நாடு முழுவதும் தக்காளி விலை, பெட்ரோல் விலையோடு போட்டிப்போடுகிறது கேஸ் விலையை நெருங்கும் முன் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

central government should control tomato price immediately says minister udhayanidhi stalin
Author
First Published Jul 13, 2023, 4:11 PM IST | Last Updated Jul 13, 2023, 4:11 PM IST

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் தக்காளி விலை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. உத்தரபிரதேசம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருகிலோ தக்காளி 130 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியாயவிலைக்கடைகளில் நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே விற்கப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு கடைக்கும் சுமார் 50 கிலோ அளவிற்கு தக்காளி ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 700 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் 50 கிலோ தக்காளியை எத்தனை குடும்பங்களுக்கு விநியோகிக்க முடியும் என்ற குழப்பமும் நீடிக்கிறது.

குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை; கனிமொழியின் வாகனத்தை திடீரென மறித்த கிராம மக்களால் பரபரப்பு

இந்நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு வெளியிட்டுள்ள கோரிக்கையில், “விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் & இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலைவாழ் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிய பாஜகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினரால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios