தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. எஸ்.பி. வேலுமணிக்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்.!

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

Central Government Advocate may appear for SP Velumani... Chennai High Court

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்றும், வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- எம்.ஏல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்.! ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்.பி வேலுமணி.! முதல் 10 கோரிக்கை என்ன தெரியுமா?

Central Government Advocate may appear for SP Velumani... Chennai High Court

அதில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில்  தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Central Government Advocate may appear for SP Velumani... Chennai High Court

அதற்கு ராஜு அளித்த விளக்கத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக தெரிவித்தார். மேலும், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து தான் விசாரிக்கபட்டன என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு வழக்கு..! ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை.. அதிர்ச்சியில் இபிஎஸ்

Central Government Advocate may appear for SP Velumani... Chennai High Court

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என  உத்தரவிட்டதுடன், வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக மத்திய அரசு அனுமதி வழங்கிய அனுமதி திரும்ப பெறப்படாததால் இதுசம்பந்தமான தமிழக அரசு ஆட்சேபம் நிராகரிக்கப்படுகிறது எனவும்  உத்தரவிட்டனர். பின்னர் வேலுமணி மனுக்கள் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios