எம்.ஏல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்.! ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்.பி வேலுமணி.! முதல் 10 கோரிக்கை என்ன தெரியுமா?

வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில்  உள்நோக்கத்தோடு  நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த பணிகளை தொடர வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Former Minister SP Velumani has given the demand of the people of Coimbatore to the District Collector

ஆட்சியரை சந்தித்த எஸ்.பி.வேலுமணி

சட்டமன்ற தொகுத்திக்குட்பட்ட முதல் 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதினார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி தலைமையில்   சட்ட மன்ற உறுப்பினர்கள்  பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே  அர்ஜீனன்,  பொள்ளாச்சி ஜெயராமன் , அமுல்கந்தசாமி  ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற தொகுதியில் இருக்கும் 10 பிரச்சனைகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம், அதில் குறிப்பாக சாலைகள் மோசமாக இருப்பதால்  பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வலியுறுத்தி இருக்கின்றோம். மாநகராட்சி சாலைகள் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக கூறினார். அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட500 சாலைகளை திமுக அரசு ரத்து செய்துள்ளதாகவும் அந்த சாலைகள் மீண்டும் போடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். 

ஓபிஎஸ் தரப்பை விடாமல் துரத்தும் CV.சண்முகம்! திருடியதற்கான ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை! இபிஎஸ் தரப்பு.!

Former Minister SP Velumani has given the demand of the people of Coimbatore to the District Collector

வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள் என்னாச்சு.?

அதிமுக ஆட்சியில் துவங்கிய மேம்பால பணிகளை வேகமாக செய்ய வேண்டும், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் வேகப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும்.அத்திகடவு அவனாசி திட்டம் விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கைகளை கொடுத்திருப்பதாக கூறினார். கோவையில் தண்ணீர் விநியோகம் சரியாக இல்லை. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த காலங்களில் அதிமுக அரசு கொடுத்து இருந்தது. இவ்வளவு திட்டம் கொண்டு வந்தாலும் இவற்றை அவர்கள் தொடர வேண்டும். இப்ப இருக்கின்ற அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. பல பணிகள்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளலூர் பேருந்து  நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில்  உள்நோக்கத்தோடு  நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தவர்,  ஆட்சியரிம் இந்த பணிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருகப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நாங்கள் ஒரு தடவை முடிவு செய்தால் அதை மாற்ற முடியாது...! இபிஎஸ் தான் எங்கள் தலைவர்..! செல்லூர் ராஜு ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios