அதிமுக பொதுக்குழு வழக்கு..! ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை.. அதிர்ச்சியில் இபிஎஸ்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஓரிரு நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு தீர்மனம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இபிஎஸ்க்கு வலு சேர்த்த தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே விசாரணைக்காக திரும்ப அனுப்புவதாக தெரிவித்தனர். இந்த வழக்கை உயர்நீதிமனறம் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்தார். அப்போது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். மேலும் அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவிற்கு எதிராக இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் இபிஎஸ் மேல் முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என தீர்ப்பளித்திருந்தனர்.
நெருக்கும் மத்திய அரசு... அலர்ட் ஆன செந்தில் பாலாஜி...! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
இந்த தீர்ப்பால் உற்சாகம் அடைந்த இபிஎஸ் தரப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனை மேற்கொண்டர். இதனையடுத்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்