இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி...! தயார் நிலையில் 60 கேரவன்கள்..! என்ன? என்ன ? வசதிகள் உள்ளது தெரியுமா.?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார். நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு தனது நடை பயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி, 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார்.
பாதை யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி
`பாரத் ஜோடோயாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கவுள்ளார். 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடையும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று மாலை 5:25 புதுடெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படும் ராகுல் காந்தி இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தடைகிறார். இரவில் சென்னையில் தங்கும் ராகுல்காந்தி நாளை காலை 6 மணிக்கு ராஜீவ்காந்தி நினைவிடம் செல்லுகிறார். அங்கு நினைவிடத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி விட்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். அப்போது வீணை காயத்ரி அவர்களின் இசையஞ்சலி நிகழ்ச்சியில் பொது மக்களுடன் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதனையடுத்து ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு சென்னை வரும் ராகுல்காந்தி நடைபயண நிகழ்வில் கலந்து கொள்ள கன்னியாகுமரிக்கு செல்கிறார்.
தேசிய, மாநில விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியை விட..! இது தான் எனக்கு சந்தோஷம்- கவிஞர் வைரமுத்து
தயார் நிலையில் கேரவன்கள்
நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தைத் தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். இந்தநிலையில் ராகுல் காந்தியுடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
மு.க.ஸ்டாலினை சந்தித்த தங்கதமிழ் செல்வன்..! திடீர் லண்டன் புறப்பட்டார்.. என்ன காரணம் தெரியுமா..?
கேரவன்களில் உள்ள வசதிகள்
தற்போது 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அது அத்தனையும் ராகுல் காந்தியின் கேரவனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாதையாத்திரையில் கூடவே பயணிக்கும் கட்சி நிர்வாகிள், பாதுகாப்பு அதிகாரிகள், சமையலர்கள் போன்றோருக்கும் கேரவன்கள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கேரவன்களில் 4 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேரவன்களிலும் நான்கு தலைவர்கள் தங்குவாரர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ராகுல் காந்தி தங்கும் கேரவனின் இரண்டு சொகுசு பெட்கள் மட்டுமே உள்ளதாகவும். முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு தனியாக கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதையும் படியுங்கள்