பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்ததன் பின்னணி, தற்போதைய நிலையில் பெரும் அரசியல் கணக்கைக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், தாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை பாஜக இப்போது அறிந்திருக்கிறது.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்து புல்லரிக்க வைத்து விட்டார். அவர் பாராட்டிய விதம், ஆர்.எஸ்.எஸின் 100 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றிக் கதையை வார்த்தைகளில் விவரிக்க முயன்ற விதத்தால் எதிர்க்கட்சிகள் எரிச்சலடைவது இயல்பானது.
இதுவரை ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தத்திற்கு எதிராக அரசியல் ரொட்டிகளை சுட்டு வரும் எதிர்க்கட்சிகள், அதன் புகழை, அதுவும் செங்கோட்டையில் இருந்து பேசினால் எப்படி பொறுத்துக்கொள்ளும்? ஆனால், பாஜக, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தத்தில் இருந்து பிறந்த கட்சி. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜக தனது சொந்த நலனுக்காக ஆர்.எஸ்.எஸின் போராட்டங்களை மறக்க, மறைக்க முயன்றது. ஆனால், இப்போது அதே பாஜகவின் மிகவும் பிரபலமான தலைவரும், நாட்டின் பிரதமருமான மோடி, கலாச்சார தேசியவாதத்தின் நோக்கத்தில் செயல்படும் இந்த அமைப்பைப் பாராட்ட வேண்டும் என்றால், அதற்குப் பின்னால் ஒரு வலுவான பின்னணி இருந்தே ஆகவேண்டும்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸின் 100 ஆண்டுகால போராட்டப் பயணத்தை முன்வைத்த விதம், நாட்டின் அரசியல் வரலாறு, அந்த அமைப்பின் பழைய காலம், நிகழ்காலம், எதிர்காலத்தையும் பிரதிபலித்தது. ‘‘நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. இன்று நான் மிகுந்த பெருமையுடன் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது. ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்.
தேசத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது மிகவும் பெருமைமிக்க பொன்னான தருணம். தனிநபர் வளர்ச்சியில் இருந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான உறுதியுடனும், 100 ஆண்டுகளாக தாய் இந்தியாவின் நலனை நோக்கமாகவும் கொண்டு, லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். சேவை, அர்ப்பணிப்பு, அமைப்பு, ஒப்பிடமுடியாத ஒழுக்கம் ஆகியவை அதன் அடையாளமாக இருந்து வருகின்றன. அத்தகைய ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் ஒரு வகையில் உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமாகும்.
![]()
இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று, செங்கோட்டையின் கோபுரத்தில் இருந்து, இந்த 100 ஆண்டுகால தேசிய சேவைப் பயணத்திற்கு பங்களித்த அனைத்து தன்னார்வலர்களையும் நான் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் இந்த 100 ஆண்டுகால பிரமாண்டமான, அர்ப்பணிப்புள்ள பயணத்திற்காக நாடு பெருமை கொள்கிறது, அது தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்" என வானளாவப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.
சுதந்திர தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 'வாக்கு திருட்டு' என்று குற்றம் சாட்டி பாஜகவை முடக்க கணக்குப்போட்டுக் கொண்டிருக்கும் நேரம் அது. ஆனாலும், தேர்தல் ஆணையமோ அல்லது உச்ச நீதிமன்றமோ எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியவில்லை. ஆனால், பாஜக தலைமையிலான அரசை முடக்குவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சி கைவிடவில்லை. செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய விழாவில் மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரைக்கூட கலந்து கொள்ள அனுமதிக்காத அளவுக்கு எதிர்க்கட்சிகள் மோடி அரசிடம் இருந்து ஒதுங்கி நிற்கிறது.
சாதாரண மரியாதை, நெறிமுறைகளைப் பின்பற்றுவதைக்கூட பொருத்தமான அணுகுமுறையாக எதிர்கட்சிகள் கருதவில்லை. இந்நிலையில், நாட்டின் மிக முக்கியமான தேசிய திட்டத்தில் பிரதமர் மோடி இந்த வழியில் ஆர்.எஸ்.எஸை புகழ்ந்து பேசுவது, இப்போது அவரது தலைமையிலான அரசும், கட்சியும் தேசியவாதத்தின் முக்கியத்துவத்தில் இன்னும் வெளிப்படையாக வலுப்பெறும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பு வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் தொடர்பான பாஜக-வின் நிலைப்பாட்டில் கடலுக்கும், பூமிக்குமான இடைவெளி இருந்து வந்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'ஆரம்பத்தில் நாம் திறமையற்றவர்களாக இருப்போம்... கொஞ்சம் குறைவாக இருந்தால் ஆர்.எஸ்.எஸ் தேவைப்பட்டது. இன்று நாம் வளர்ந்துவிட்டோம், நாம் திறமையானவர்கள். அதனால், பாஜக தன்னைத்தானே இயக்குகிறது. இதுதான் வித்தியாசம்' என்று கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு நட்டாவின் பேச்சைப் பிடிக்கவில்லை. அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர், உள்ளுக்குள் குமுறினர். இதனால், பாஜகவின் மக்களவை இடங்கள் 303-ல் இருந்து 240 ஆகக் குறைந்தது. பாஜகவால் தானாகவே பெரும்பான்மையைக் கடக்க முடியவில்லை தாக ஒரு பேச்சும் எழுந்தது.
தவறு உணரப்பட்டபோது, ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு, பாஜக தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதில் பெரும் பங்கு வகித்தார். மக்களவையில் பாஜக கூட்டணி அதிக இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. அதில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால், ஃபட்னாவிஸின் முயற்சிகளுக்குப் பிறகு, பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ் மீண்டும் அடிமட்டத்தில் முழு உற்சாகத்துடன் களப்பணியாற்றத் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் தவிர மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அமைக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரிலும் கட்சி சிறப்பாகச் செயல்பட்டது.

இப்போது பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய சவால் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள். அடுத்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். இது ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தொடங்குகிறது. கொண்டாட்டங்களின் முக்கிய நாள் அக்டோபர்- 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இருக்கும்.
பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்ததன் பின்னணி, தற்போதைய நிலையில் பெரும் அரசியல் கணக்கைக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், தாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை பாஜக இப்போது அறிந்திருக்கிறது.
