Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களுக்கு பாஜக பச்சை துரோகம்.. இலங்கைக்கு இந்தியா எவ்வளவு ஜால்ரா போட்டாலும் வேஸ்ட் .. பழ.நெடுமாறன்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் சிங்கள அரசுக்கு எதிரான கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கு செய்துள்ள அப்பட்டமான துரோகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:

BJP's betrayal to Tamils.. Even if India helps Sri Lanka so much, it is a waste. Paza.Nedumaran
Author
First Published Oct 8, 2022, 8:54 AM IST

ஐ.நா. மனித உரிமை ஆணையம் சிங்கள அரசுக்கு எதிரான கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கு செய்துள்ள அப்பட்டமான துரோகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:

இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழர்களின் உரிமைகளை காத்தல், 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றல், விரைவில் மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தி போதுமான அதிகாரங்களை அளித்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அவற்றை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  

BJP's betrayal to Tamils.. Even if India helps Sri Lanka so much, it is a waste. Paza.Nedumaran

இதையும் படியுங்கள்: ஆன்லைன் விளையாட்டை தடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் - திருமாவளவன்

2012ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஏழு முறை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாக்களிக்காமல் இவ்வாறே இந்தியா புறக்கணித்திருக்கிறது. கடந்த கால காங்கிரசு அரசு கையாண்ட நடைமுறையையே தற்போதைய பா.ச.க. அரசும் பின்பற்றுவது தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் இரு கட்சிகளுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.  

இதையும் படியுங்கள்: இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை

இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த 20 நாடுகளைப் பாராட்டுகிறேன். நியாயமாக இத்தகைய தீர்மானத்தை அண்டை நாடான இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மேலும் பல நாடுகள் ஆதரவளித்திருக்கும். இதன்மூலம் இலங்கை அரசுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகமாகி அதன் விளைவாக ஈழத் தமிழர்களின் துன்பம் ஓரளவு குறைக்கப்பட்டிருக்கும்.

BJP's betrayal to Tamils.. Even if India helps Sri Lanka so much, it is a waste. Paza.Nedumaran

இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு ஈழத் தமிழர்களைக் கைக் கழுவியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவு கொள்ளுமே தவிர, ஒருபோதும் இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக இருக்காது. இந்த உண்மையை இந்திய அரசு உணரவேண்டும். இல்லையேல் வட எல்லையில் மட்டுமல்ல, தென் எல்லையிலும் சீனாவின் அபாயம் இந்தியாவை அச்சுறுத்தும் என்பதில் ஐயமில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios