Asianet News TamilAsianet News Tamil

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து!

நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி ரூபாய்  சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. 

BJP MLA nainar nagendran son bond registration worth Rs.100 crore canceled!
Author
First Published Jul 20, 2023, 8:55 AM IST

நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பதியப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி ரூபாய்  சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பப்பட்டது. 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? 5 மணிநேரம் கரண்ட் கட்..!

BJP MLA nainar nagendran son bond registration worth Rs.100 crore canceled!

மேலும், இந்த குற்றச்சாட்டு இந்த புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர், இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளதாகவும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க;-  மகளிர் உரிமைதொகை திட்டம்..! இன்று முதல் நேரடியாக வீடு தேடி வரும் விண்ணப்பம்.... எந்த எந்த ஆவணங்கள் தேவை.?

BJP MLA nainar nagendran son bond registration worth Rs.100 crore canceled!

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மோசடியாகப் பதியப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.  மோசடி பத்திரப்பதிவு புகார் விசாரிக்கப்பட்டு உறுதியான நிலையில் ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி மாநில பாஜக இளைஞரணி துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios