Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? 5 மணிநேரம் கரண்ட் கட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், ஆவடி, அடையாறு, போரூர், கே.கே.நகர், உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
பள்ளிக்கரணை, ஏரிக்கரை, பெரியார் நகர், மணிமேகலை தெரு, கிருஷ்ணா நகர், சிட்லபாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, தனலட்சுமி நகர், கணபதி காலனி, ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, மாதா கோயில் தெரு, ஐஓபி காலனி, டிஎன்எஸ்சிபி வெண்பா அவென்யூ, டிஎன்எச்பி காலனி, எம்ஜிஆர் நகர், பம்மல் வெங்கடேஸ்வரா நகர், ஆண்டால் நகர், ஈசிடிவி நகர், பிரேம் நகர், கெருகம்பாக்கம், பல்லாவரம் பாரதி நகர் மெயின் ரோடு, துலுகாநாதம்மன் கோயில் தெரு, ஐ.ஏ.எப். சுதானந்த பாரதி தெரு, சர்மா தெரு, முருகேசன் தெரு, மாடம்பாக்கம், வெங்கைவாசல் மெயின் ரோடு, விசாலாக்ஷி நகர், கே.கே. சாலை, மெப்ஸ் சுப்புராய நகர், திருநீர்மலை ரோடு, மகாலட்சுமி பள்ளி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
பிடி ராஜன் சாலை, அரும்பாக்கம், எஸ்.ஏ.எப். கேம்ஸ் கிராமம், ராமசாமி சாலை ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
ஆவடி:
புழல் மெட்ரோ வாட்டர், மத்திய சிறை I முதல் III வரை, சிறைக் குடியிருப்பு, புனித அந்தோணியார் கோயில் தெரு, ரெட் ஹில்ஸ் மார்க்கெட், ரெட்ஹில்ஸ் ஜிஎன்டி சாலை, காமராஜ் நகர், எம்ஏ நகர், இந்திரா காந்தி சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
சின்ன காலனி, பிகேஎம் சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட் திருவேற்காடு, விஜிஎன் அபார்ட்மென்ட், சிவன் கோயில் சாலை, சக்திவேல் நகர், கொலடி சாலை, டிஐ சைக்கிள் ராமாபுரம், பஜார், எம்டிஎச் சாலை, அன்னை சத்யா நகர், விஜிஎன் சாந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
லேபர் காலனி 1 முதல் 4வது தெருக்கள், ராஜ் பவன், வேளச்சேரி மெயின் ரோடு, பாரதியார் நகர், நரசிங்கபுரம், நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை, கல்லூரி சாலை, காந்தி சாலை, சர்ச் தெரு, ஆதம்பாக்கம் டெலிபோன் காலனி, செக்ரடேரியட் காலனி, கணேஷ் நகர் ராமாபுரம், நேரு நகர், காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
பி.டி.நகர் மெயின் ரோடு, சோழன் நகர், சபாபதி நகர், மாங்காடு, குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, கோவூர் புத்தவேடு, மூன்றாம் கட்டளை மெயின் ரோடு, நான்கு ரோடு சந்திப்பு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
ஈ.டி.எல். பஞ்சாயத்து அலுவலகம், திருவள்ளுவர் நகர், தரமணி, கேபிகே நகர், நேரு நகர், சிறுசேரி ஓஎம்ஆர், தாழம்பூர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
1வது அவென்யூ எஸ்எஸ்என் 1 முதல் 9வது பாதைகள், எஸ்எஸ்என் கொட்டிவாக்கம் நியூ காலனி, ராஜா கார்டன், சீனிவாசபுரம் பெசன்ட் நகர் ஆர்பிஐ குடியிருப்பு, கக்கன் காலனி, டைகர் வர்தாச்சாரியார் சாலை, சுங்க காலனி இந்திரா நகர், சிபிடபிள்யூ குடியிருப்பு, எல்பி சாலை, ஆனந்த் பிளாட்ஸ், திருவான்மியூர் காந்தி தெரு, வள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
சி.எம்.பி.டி.டி VS மணி நகர், இந்தியா கேட், கந்தன் நகர், ரங்கா கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி:
மாதர்பாக்கம், கண்ணம்பாக்கம், ஈகுவார்பாளையம், செந்தில்பாக்கம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.