அந்த ஆடியோவில் பேசியது நான் தான்.. உண்மையை ஒத்துக்கொண்ட அண்ணாமலை - கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!!
2016 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தாலும், அதன்பின்னர் ஆட்சியில் இருந்த அதிமுக விமான நிலையத்திற்காக பரந்தூர் உள்பட இன்னொரு இடத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.
சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து தற்போது அவர்களது மனது மாறியிருக்கிறதா? மாறியிருந்தால் ஏன் மாறியிருக்கு? அப்படியிருந்தால் மத்திய அரசு கொண்டுவந்த நிறைய திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள் ? என்று வரிசையாக குற்றசாட்டை அடுக்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக நேரடியான ஒரு விளக்கத்தை கொடுப்பார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை முதல்வர் கொடுக்க வேண்டும். இதே பிரச்சினை தான் பரந்தூர் விமான நிலையத்திற்கும் உள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒரு மாநிலத்திற்கு நிறைய விமான நிலையங்கள் வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.
மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்
எங்கெல்லாம் பெரிய விமான நிலையம் வரவில்லையோ, அங்கு உதான் திட்டத்தின் கீழ் சிறிய விமான நிலையத்தையாவது கொண்டு வரவேண்டும் என்ற வகையில், இந்த உதான் திட்டத்திற்கே உந்துசக்தியாக பாரத பிரதமர் இருந்துள்ளார். காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் வரவுள்ளது. 51 சதவீத ஹோல்டிங் மத்திய அரசிடமும், 49 சதவீதம் மாநில அரசிடமும் இருக்கப்போகிறது.
2016 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தாலும், அதன்பின்னர் ஆட்சியில் இருந்த அதிமுக விமான நிலையத்திற்காக பரந்தூர் உள்பட இன்னொரு இடத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தனர். ஆட்சிக்கு வந்த திமுக அவர்கள் தேர்வு செய்த இன்னொரு இடத்தை விட்டுவிட்டு மத்திய அரசிடம் 4 இடங்களைக் கொண்டு சென்றனர்.
மத்திய அரசைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் அனைத்துவிதமான சோதனைகளையும் கடந்துவந்த பிறகுதான், அனுமதி வழங்கும். விமானத் துறை அமைச்சர் அனுமதி கொடுத்தாலும்கூட, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்று அது வரவேண்டும். மாநில அரசு தேர்வு செய்துள்ள எந்த இடமாக இருந்தாலும்கூட மத்திய அரசு சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு அனுமதி வழங்கப்போகிறது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!
ஆனால், மாநில அரசின் திட்டமிடுதல் மற்றும் வெளிப்படத்தன்மை இல்லாத காரணத்தால் பரந்தூரில் யாருடைய வீடுகளை எல்லாம் கையகப்படுத்தப்பட உள்ளதோ அந்த மக்களும், நீர்பிடிப்பு பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆளும் திமுக அரசின் திட்டமிடுதல் சரியாக இல்லாத காரணத்தால், மத்திய அரசு தயாராக இருக்கின்ற ஒரு திட்டம், கொடுக்க வேண்டிய திட்டத்துக்கு மறுபடியும் இவர்களாகவே தடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அமைச்சர் சாதரணமாக கூறுகிறார், மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்க தயாராக இருக்கிறோம் என்று அரசின் கோரிக்கையை மக்கள் ஏற்கவில்லை. இதனை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. இதனை அரசு விரைந்து சரிசெய்து, மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். விமான நிலையமும் வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், மதுரை புறநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனும் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய ஆடியோ குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை.இதுகுறித்து பேசிய அவர், ‘நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மைதான்.
ஆடியோவில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும், சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். பாஜகவினர் செருப்பு வீசாமல், அமைச்சர் பிடிஆரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமாக மாறியது. திமுகவினர் எடிட் செய்யப்படாத ஆடியோவை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அண்ணாமலை.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !