அரசியல் நோக்கத்துக்காகவே மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு-சட்டசபையில் வெளிநடப்பு செய்த பாஜக ஆவேசம்

பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக ஆதிதிராவிடர்களை ஏமாற்றக்கூடிய வகையில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக அரசு  தீர்மானத்தை கொண்டு வந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார். 

BJP alleges that reservation of seats for converted Christians is done for political purposes

இட ஒதுக்கீடு தீர்மானம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி,  பட்டியலின மக்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், இடஒதுக்கீடு  மற்றும் சலுகைகளை,  கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க கோரி் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனை அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றது. ஆனால் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

இதனைதொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசின் இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்கு மத்தியிலே மோடி தலைமையிலான அரசு 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. 

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில முக்கிய நிர்வாகி..! அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி

BJP alleges that reservation of seats for converted Christians is done for political purposes

பொதுவான மயானம் இல்லை

ஏற்கெனவே,  இது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும்போது, உச்ச நீதி மன்ற  வரம்பிற்கு உள்ள ஒரு விவகாரத்தில்,  மாநில அரசு ஏன் இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பாஜக முன் வைக்கிறது.  கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியல் இன மக்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.  இன்னும் கூட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு  பொதுவான மாயானம் கிடையாது, இவை அனைத்தும் மாநில அரசின் விவகாரத்தில் வரம்பில் வரும் நிலையில் அந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு,

BJP alleges that reservation of seats for converted Christians is done for political purposes

தேர்தலுக்காக தீர்மானம்

அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டினார். ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நடந்து வருகிறது இதனை தடுப்பதற்கான சட்டம்  இவற்றைப்பற்றி எல்லாம் எதையும் கவலைப்படாத திமுக,  முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானம் கொண்டுள்ளது என பாஜக கருதுகிறோம் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக வானதி சீனிவாசன் கூறினார். 

இதையும் படியுங்கள்

கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு.! சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம் - எதிர்த்து நின்ற பாஜக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios