கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு.! சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம் - எதிர்த்து நின்ற பாஜக

கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

The resolution regarding reservation of seats for Adi Dravidians who converted to Christianity was passed in the Legislative Assembly

இட ஒதுக்கீடு தீர்மானம்

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வழியுறுத்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.  ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

The resolution regarding reservation of seats for Adi Dravidians who converted to Christianity was passed in the Legislative Assembly

கல்வி வேலை வாய்ப்பு

நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர் பௌத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்குப் பட்டியலின் வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும் மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. 

The resolution regarding reservation of seats for Adi Dravidians who converted to Christianity was passed in the Legislative Assembly

திராவிட மாடல் நோக்கம்

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல, இத்தகைய சாதி என்பது நீ வேறு நான் வேறு என்பதாக இல்லாமல். நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது.  சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ. அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். 

ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஊக்கத்தொகை, முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950-ன்படி இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. 

The resolution regarding reservation of seats for Adi Dravidians who converted to Christianity was passed in the Legislative Assembly

போலிச்சான்றிதழ்- கடும் எதிர்ப்பு

கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும் மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். 

The resolution regarding reservation of seats for Adi Dravidians who converted to Christianity was passed in the Legislative Assembly

தீர்மானம் நிறைவேறியது

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்த முதலமைச்சர் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில் மற்ற கட்சியின் ஆதரவோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது.

இதையும் படியுங்கள்

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில முக்கிய நிர்வாகி..! அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios