Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில முக்கிய நிர்வாகி..! அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி

ஆருத்ரா முறைகேடு தொடர்பாக அண்ணாமலையை விமர்சித்து விட்டு பாஜகவில் இருந்து விலகிய மாநில நிர்வாகி கிருஷ்ண பிரபு, அதிமுகவில் தன்னை இணைந்துகொண்டார்.

The state executive of the economic wing who left the BJP joined the AIADMK
Author
First Published Apr 19, 2023, 1:01 PM IST | Last Updated Apr 19, 2023, 1:39 PM IST

பாஜகவில் உட்கட்சி மோதல்

பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த சிடி நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநில தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தியால் அவரை கடுமையாக விமர்சித்து விட்டு அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணப்பிரபு, அண்ணாமலையை விமர்சித்து கட்சியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில்,  தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாகவும் இதை பாஜக தலைமை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். 

The state executive of the economic wing who left the BJP joined the AIADMK

பாஜக தலைமை மீது புகார்

இதனையடுத்து பாஜகவின் பெயருக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்த மதுரை மாநகர பாஜக,  கட்சி நிர்வாகிகள் யாரும்  கிருஷ்ணபிரபுவிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் முன்னிலையில் கிருஷ்ணபிரபு   தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  கிருஷ்ணபிரபு,  தமிழக பாஜக ஆருத்ரா பைனான்ஸ் மோசடி விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அதன் பாதிப்பு தமிழக முழுவதும் இருந்து வருவதாகவும், இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு ராஜினாமா  கடிதம் கொடுத்ததாக கூறினார்.  

The state executive of the economic wing who left the BJP joined the AIADMK

அதிமுகவில் இணைந்த மாநில நிர்வாகி

மேலும் எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இளைஞர்கள் மத்தியிலும் இபிஎஸ்க்கு நல்ல வரவேற்பு இருப்பதாக  கிருஷ்ணபிரபு தெரிவித்தார். ஏற்கனவே அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தது பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்தது. இந்தநிலையில் ஆரூத்ரா முறைகேடு புகார் தொடர்பாக அண்ணாமலையை விமர்சித்துவிட்டு அதிமுகவில் மற்றொரு மாநில நிர்வாகி இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார் கூறி அலறவிட்ட நிர்வாகி.. பாஜக எடுத்த அதிரடி முடிவு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios