யூடியூப் சேனல்களை முடக்க துடிப்பது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால்.. தீர்ப்பை கண்டித்த தடா ரஹூம்.
கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹீம் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் தடா ரஹீம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
மாணவி ஸ்ரீ மதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், மாணவியின் பெற்றோர் அதை முற்றிலும் மறுத்து வருகின்றனர் இந்த வழக்கு தொடர்பாக களத்திற்குச் சென்று புலனாய்வு நடத்தி பல வெளிவராத உண்மைகளை டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பல அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வெளிக்கொண்டு வந்ததும் இதே ஊடகங்கள்தான்.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு.. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்க தீர்ப்பு வெளியானது..!
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.சதீஷ்குமார் அவர்கள் 29.08.22 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில். மாணவி மரணம் தொடர்பாக “இணை விசாரணை” (Parallel investigation) நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான முன்னுதாரணம் மட்டுமின்றி கருத்து சுதந்திரத்திற்கு விடப்படும் மிகப்பெரிய சவால்.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா செங்கோட்டையன்..? இபிஎஸ்ஐ சந்தித்த பிறகு திடீர் விளக்கம்
பெரிய ஊடகங்கள் எல்லாம் கார்ப்பரேட் கைப்பாவையாக மாறிய நிலையில் வளைய தள தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பிரதிபலித்து வருவதை நீதிமன்றமே முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது, பொய் செய்திகள் பரப்புவதாக கூறி யூடியூப் சேனல்களை தடை செய்ய சொல்லும் நீதிமன்றம் தேர்தலுக்கு முன்பு கற்பனைக்கு எட்டாத பல பொய் வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளின் பொய் பரப்புரையை வாதம் விவாதம் நடத்தி மக்களை ஏமாற்றி பொய்யர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய கார்ப்பரேட் ஊடகங்களை தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியுமா ?
கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் வரும் செய்திகள் மட்டுமே உண்மை போலவும் யூடியூப் என்கிற வளைய தள தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் வரும் செய்திகள் பொய்யானது போல மக்கள் மத்தியில் நீதி மன்றமே விஷமத்தை பரப்புவது கண்டிக்கத்தக்கது. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரின் இந்த கருத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.