Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பொதுக்குழு.. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்க தீர்ப்பு வெளியானது..!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

AIADMK general committee.. Why was the order of the single judge cancelled? 127 page verdict released..!
Author
First Published Sep 2, 2022, 1:32 PM IST

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? 127 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தனர். இந்நிலையில், நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு பிறப்பித்த 128 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* ஜூலை 11ல் பொதுக்குழு நடக்கும் என ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான்.

*  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.

*  ஒருவொருக்கு ஒருவர் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் பொதுக்குழுவை கூட்ட முடியாத நிலை தான் உள்ளது. 

*  அதிமுக பொதுக்குழுவை கூட்ட தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது தவறில்லை.

*  ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அதனை போலி என்று கூற முடியாது.  

*  தனி நீதிபதியின் உத்தரவால் அதிமுக முடங்கும் நிலையில் உள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

*  இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு ஈடு செய்ய முடியாதத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

*  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும்.

*  ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில் அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு.

*  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா, இல்லையா என்பதை பிரதான சிவில் வழக்குதான் தீர்மானிக்கும். 

*  உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்குகள் தொடர முடியாது என்று கூற முடியாது.

*  பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்தார்.

*  ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் ஜூன் 23க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. 

* அதிமுக விதிகளின்படி பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios