ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா செங்கோட்டையன்..? இபிஎஸ்ஐ சந்தித்த பிறகு திடீர் விளக்கம்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு மூலம் தர்மம் வென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

Sengottaiyan has denied the reports that he is going to join the OPS team

ஓபிஎஸ்சை ஆதரிக்கும் நிர்வாகிகள்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,  ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து ஓபிஎஸ் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்து விட்டது. அதே நேரத்தில் ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இபிஎஸ் அணியில் இருந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ்சை சந்தித்தார். இதே போல நடிகர் பாக்கியராஜ் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவேன் என கூறியிருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடியுமா..? செக் வைத்த இபிஎஸ்...!

Sengottaiyan has denied the reports that he is going to join the OPS team

செங்கோட்டையன் நிலைப்பாடு என்ன ?

இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில்  ஒருவரான செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வந்தார். எனவே செங்கோட்டையன் ஓபிஎஸ் அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதனை மறுக்கும் விதமாக சென்னை பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு செல்லும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தர்மம்  வென்றுள்ளது.  இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்களுக்கு  இனி எந்த குழப்பத்திற்கு இடமில்லை என தெரிவித்தார். அதிமுகவில் என்றும் நான் நிலைத்து நிற்பேன், ஓபிஎஸ் தரப்பிற்கு செல்வேன் என்ற தடுமாற்றத்திற்கு இடமே இல்லை என உறுதிபட தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்யை நீக்கியது செல்லும்...! அரசியலில் இனி அவர் ஜீரோ...! - ஜெயக்குமார்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios